பொது செய்தி

இந்தியா

போலி தடுப்பூசி முகாம்: மும்பையில் 2,000 பேருக்கு தண்ணீர் செலுத்தி மோசடி; 10 பேர் கைது

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
மும்பை: மும்பையில் 2,000 பேருக்கு போலியாக தடுப்பூசி செலுத்தப்பட்ட வழக்கில், 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.கோவிட் பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளன. தனியார் மருத்துவமனைகள் சார்பிலும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், மும்பை மாநகரில் உள்ள பல குடியுருப்புகளில் தனியார் மருத்துவமனை

மும்பை: மும்பையில் 2,000 பேருக்கு போலியாக தடுப்பூசி செலுத்தப்பட்ட வழக்கில், 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கோவிட் பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளன. தனியார் மருத்துவமனைகள் சார்பிலும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், மும்பை மாநகரில் உள்ள பல குடியுருப்புகளில் தனியார் மருத்துவமனை முகாம் எனக் கூறி, கோவிட் தடுப்பூசிக்கு பதிலாக தண்ணீர் செலுத்தி ஏமாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.



latest tamil news



மும்பை குடியிருப்பு ஒன்றில் கடந்த மே 30ம் தேதி தடுப்பூசி செலுத்தும் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து, தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த முகாமில் குடியிருப்பை சேர்ந்த 390 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஒருவருக்கு ரூ.1,260 வீதம் மொத்தம் ரூ.4.56 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 120 பேருக்கு மட்டுமே வெவ்வேறு மருத்துவமனைகளின் பெயரில் தடுப்பூசி சான்று வந்தது. சான்று கிடைக்காதவர்கள் குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு தொடர்பு கொண்டு கேட்டதில், அந்த மருத்துவமனைகளுக்கு இச்சம்பவம் பற்றி தெரியவில்லை எனக் கூறியுள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.


latest tamil news



போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், முகாமில் செலுத்தப்பட்டது தடுப்பூசி அல்ல, தண்ணீர் என தெரியவந்துள்ளது. வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மும்பை மாநகரில் பல்வேறு மருத்துவமனைகளிடம் இருந்து காலி குப்பிகளை பெற்று, அதில் தண்ணீர் நிரப்பி, தடுப்பூசி எனக் கூறி 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர்ந்த 2,000க்கும் அதிகமானோருக்கு செலுத்தியது தெரியவந்துள்ளது.
'இதுபோன்ற போலி தடுப்பூசி முகாம்களை தடுக்க மகாராஷ்டிர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் தடுப்பூசி கொள்கையில் புதிய விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202118:45:33 IST Report Abuse
Venkat Sadagopan இதை ஒரு தேசத்துரோக குற்றமாக கருத வேண்டும். இவர்களை தப்ப விடக்கூடாது.
Rate this:
Cancel
26-ஜூன்-202115:25:06 IST Report Abuse
வாஸ்ஸுதேவன் வணக்கம்.எனக்கு ஒருகண் பேனாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்று நினைப்பவர்கள் நம் முன்னோர்களில் சிலர் இருந்திருக்கிராரார்கள். இவர்களோ அடுத்தவரகள் செத்தாலும் பரவாயில்லை தான் கல்லா கட்டவேண்டும் எனநிக்கிரார்கள். இந்தியர்களாகிய நாம் நன்றாக முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். வெட்கத்துடன் வாஸ்ஸுதேவன்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-ஜூன்-202107:51:30 IST Report Abuse
RajanRajan போலிகளை பிடித்ததுமே என்கவுன்ட்டர் பண்ணிடுங்க. மக்களின் உயிரோடு விளையாடுபவர்களுக்கு அது ஒன்னு தான் நிரந்தர தீர்வு. அதை வுட்டுட்டு .........எதுவும் தேவை இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X