அபாயகரமாக சென்ற வாத்ரா கார்: அபராதம் விதித்த டில்லி போலீஸ்

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி சாலையில், அபாயகரமாக வாகனத்தை ஓட்டி சென்றதாக, காங்கிரஸ் பொது செயலர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.ராபர்ட் வாத்ரா, நேற்று காலை அலுவலகத்திற்கு தனது காரில் அலுவலகம் சென்று கொண்டிருந்தார். காரை, டிரைவர் ஓட்டி சென்றார். அதற்கு முன்னாள், பாதுகாவலரின் காரும் சென்றது. டில்லியின் தெற்கு பகுதியில் சுக்தேவ் விகார்
ராபர்ட் வாத்ரா, பிரியங்கா, பிரியங்கா காந்தி,  அபராதம், கார்

புதுடில்லி: டில்லி சாலையில், அபாயகரமாக வாகனத்தை ஓட்டி சென்றதாக, காங்கிரஸ் பொது செயலர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

ராபர்ட் வாத்ரா, நேற்று காலை அலுவலகத்திற்கு தனது காரில் அலுவலகம் சென்று கொண்டிருந்தார். காரை, டிரைவர் ஓட்டி சென்றார். அதற்கு முன்னாள், பாதுகாவலரின் காரும் சென்றது. டில்லியின் தெற்கு பகுதியில் சுக்தேவ் விகார் பகுதியில் அமைந்துள்ள பாரபுல்லா பாலத்தில், அபாயகரமான முறையில் அதிவேகமாக காரை இயக்கிய டிரைவர், திடீரென பிரேக் பிடித்தார். அதில், முன்னாள் சென்ற கார் மீது மோதியது.


latest tamil news


இதனையடுத்து, மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவு எண் 184ன் கீழ், அபாயகரமாக காரை இயக்கியதற்காக, அபராதம் விதித்தும், அதற்கான சலானை, வாத்ராவிடம் போலீசார் வழங்கினர்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, டில்லியில் அதிவேகமாக, ஆபத்தான முறையில் காரை இயக்கி, வாத்ரா காரை முந்தி சென்ற இளைஞருக்கு, மேற்கண்ட சட்டப்பிரிவின் கீழ் டில்லி போலீசார் அபராதம் விதித்திருந்தனர். விஐபி கார் என்பது தனக்கு தெரியாது என அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
26-ஜூன்-202111:32:38 IST Report Abuse
Dr. Suriya ஆமா இந்த ஆளுக்கு எதுக்கு பாதுகாப்பு? எப்படி எல்லாம் என்க கிட்டேருந்து வரின்னு வசூலித்து இந்த வெட்டி பயலுவோளுக்கு பாதுகாப்புன்னு செலவலிக்குது இந்த அரசாங்கம்.....
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
26-ஜூன்-202109:04:59 IST Report Abuse
Vena Suna பல வழக்கு அவன் மேல
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-202108:06:07 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga இதெல்லாம் ஒரு செய்தியின்னு தினமலர் போன்ற நாள் இதழ்கள் பக்கத்தை வீணடிக்க கூடாது. இப்போ ஒன்னும் சிதம்பரம் போல ஆட்கள் உள்துறை அமைச்சர் இல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X