பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 48 பேருக்கு டெல்டா பிளஸ் கோவிட்: தமிழகத்தில் 9 பேருக்கு பாதிப்பு

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (1+ 23)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் 48 பேருக்கு டெல்டா பிளஸ் கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 9 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.டில்லியில் நிருபர்களை சந்தித்த நோய் கட்டுப்பாட்டிற்கான தேசிய கட்டுப்பாட்டு அறை இயக்குநர், டாக்டர் எஸ்கே சிங் கூறியதாவது: தற்போதைய நிலையில், இந்தியாவில், கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்து உள்ளது. மஹாராஷ்டிராவில் 20 பேர்,
india, tamilnadu, covid, corona, coronavirus, covid19, deltaplus,  தமிழகம், இந்தியா, தமிழ்நாடு, கோவிட், கொரோனா, கொரோனா வைரஸ், டெல்டா பிளஸ்,

புதுடில்லி: இந்தியாவில் 48 பேருக்கு டெல்டா பிளஸ் கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 9 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

டில்லியில் நிருபர்களை சந்தித்த நோய் கட்டுப்பாட்டிற்கான தேசிய கட்டுப்பாட்டு அறை இயக்குநர், டாக்டர் எஸ்கே சிங் கூறியதாவது: தற்போதைய நிலையில், இந்தியாவில், கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்து உள்ளது. மஹாராஷ்டிராவில் 20 பேர், தமிழகத்தில்09 பேர், ம.பி.,யில் 07 பேர், பஞ்சாப், குஜராத்தில் தலா இருவர், கேரளாவில் 3 பேர், கர்நாடகா, ஜம்மு,ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திராவில் தலா ஒருவர் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா கூறுகையில், கர்ப்பணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. அவர்களுக்க பயனுள்ளதாக இருக்கும் என்பதால், அவர்களும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.உருமாறிய கோவிட் வகைகளான ஆல்பா, பீட்டா, காமா ஆகியவற்றிற்கு எதிராக கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் செயல்படுகின்றன. டெல்டா பிளஸ் வகை தற்போது 12 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்தியாவில் 48 பேருக்கு உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. முக்கியமாக, பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு தனிமைபடுத்தப்பட்டனர்.

டெல்டா பிளஸ் வைரசும் தனியாக பிரித்தெடுக்கப்பட்டது. உருமாறிய வைரசுக்கு எதிராக நடந்த ஆய்வை போல், இந்த வைரஸ் குறித்தும் ஆய்வு நடக்கிறது. ஆய்வகங்களில், வைரசுக்கு எதிரான தடுப்பூசி திறன் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இதன் முடிவுகள் அடுத்த 7 அல்லது 10 நாட்களில் தெரிய வரும்.


latest tamil news



தற்போது ஒரு நாட்டில் மட்டுமே குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இருப்பினும், தற்போது குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. தற்போது வரை குழந்தைகளுக்கு தடுப்பூசி குறித்த நிறைய தகவல்கள் நம்மிடம் உள்ளன. அதேநேரத்தில் அதிக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் நிலையில் நாம் இல்லை. இருப்பினும், 2 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி குறித்து ஆய்வு நடக்கிறது. இதற்கான முடிவுகள் செப்., மாதத்திற்கு பிறகு தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1+ 23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
25-ஜூன்-202117:58:26 IST Report Abuse
 N.Purushothaman தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மூன்று பேருக்கு தான் பாதிப்பு இருக்குன்னு அடிச்சி விட்டாரு ...மற்ற ஆறு பேத்துக்கு வேற வைரஸா இருக்குமோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X