அத்துமீறும் சீன விமானப்படை; தைவான் கண்டனம்

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021
Share
Advertisement
தைபே: சீனாவுக்கும் தைவானுக்கும் தொடர் மோதல்போக்கு நீடித்தவண்ணம் உள்ளது. தைவானில் ஏர் டிபன்ஸ் ஜூன் எனப்படும் வான்படை எல்லைக்குள் சீன விமானிகள் அத்துமீறிப் புகுந்துள்ளனர். இதனையடுத்து தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு சிறிய தீவு நாடான தைவானை சீனா தனது தேசிய பாதுகாப்புச் சட்டம் மூலமாக முழுவதுமாக ஆக்கிரமிக்க
Taiwan, Military Conflict, China, Foreign Minister, Wu, Needs to Prepare, சீனா, விமானப்படை, அத்துமீறல், தைவான், கண்டனம்

தைபே: சீனாவுக்கும் தைவானுக்கும் தொடர் மோதல்போக்கு நீடித்தவண்ணம் உள்ளது. தைவானில் ஏர் டிபன்ஸ் ஜூன் எனப்படும் வான்படை எல்லைக்குள் சீன விமானிகள் அத்துமீறிப் புகுந்துள்ளனர். இதனையடுத்து தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சிறிய தீவு நாடான தைவானை சீனா தனது தேசிய பாதுகாப்புச் சட்டம் மூலமாக முழுவதுமாக ஆக்கிரமிக்க நினைத்தது. இதனையடுத்து ஜனநாயக நாடான தைவானில் அவ்வப்போது சீனா அத்துமீறி வந்தது. அவ்வப்போது தைவான் கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றுடன் சீன வீரர்கள் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தனர். சீனாவின் இந்த அத்துமீறலில் இருந்து தப்பிக்க தைவான் அப்போது அமெரிக்காவின் உதவியை நாடியது.


latest tamil news


அமெரிக்காவுடன் தைவான் பல்வேறு பாதுகாப்பு ஒப்பந்தங்களை இட்டது. தென்கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் கூட்டு ராணுவப்பயிற்சி மேற்கொள்வது சீனாவை கொந்தளிக்க வைத்தது. இதனையடுத்து அவ்வப்போது சீன விமானப்படை தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. சமீபத்தில் சீன விமானங்கள் இவ்வாறு செய்ததை அடுத்து தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X