அரசியல் செய்தி

தமிழ்நாடு

வழிபாட்டு தலங்கள், பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் 23 மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்து, 4 மாவட்டங்களில் வழிபாட்டுதலங்கள் திறக்க அனுமதித்து ஜூலை 5 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தினசரி குறைந்து வருகிறது. இதையடுத்து ஊரடங்கு சில தளர்வுகளுடன், ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு
 வழிபாட்டு தலங்கள்,  பொது போக்குவரத்து,தமிழக அரசு அனுமதி

சென்னை : தமிழகத்தில் 23 மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்து, 4 மாவட்டங்களில் வழிபாட்டுதலங்கள் திறக்க அனுமதித்து ஜூலை 5 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தினசரி குறைந்து வருகிறது. இதையடுத்து ஊரடங்கு சில தளர்வுகளுடன், ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்படுவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் ஸ்டாலின், இன்று ஆலோசனை நடத்தினார்.


latest tamil news



இதையடுத்து 23 மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்து, கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்

* கோவை, நீலகிரி,ஈரோடு, சேலம், கரூர், நாகை, திருச்சி, தஞ்சை, திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் டீக்கடைகள், வீட்டு உபயோக மின்சார கடைகள், போட்டோ, வீடியோ ஜெராக்ஸ் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கலாம்.

* 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி.

* 23 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கடைகள் இயங்க அனுமதி

*சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் ஜவுளிகடைகள் நகை கடைகள் திறக்க அனுமதி

*4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கும், வணிக வளாகங்களுக்கும் , உணவகங்களில் பார்சல்களுக்கும் அனுமதி

* 11 மாவட்டங்களில் தியேட்டர்கள் வட்டாட்சியர் அனுமதி பெற்று பராமரிப்பு பணி செய்யலாம்.

* சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய 4 மாவட்டங்களில் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க நிறுவனங்களுக்கு அனுமதி.

*11 மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி

*23 மாவட்டங்களில் திருமண இ பதிவு தேவையில்லை.
23 மாவட்டங்களில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி

27 மாவட்டங்களில் திருமணம் சார்ந்த போக்குவரத்திற்கு இ பதிவு இல்லாமல் பயணிக்கலாம்.

கடற்கரையில் நடைபயிற்சிக்கு அனுமதி
11 மாவட்டங்களில் உள்ளவர்கள் மட்டும் பிற மாவட்ட திருமணத்திற்கு செல்ல இ பதிவு பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூன்-202123:08:34 IST Report Abuse
உண்மை முதல்வர் அவர்களுக்கு,டெல்டா வைரஸ் தொற்று உருவாகியுள்ள இந்த நேரத்தில் ஊரடங்கு தளர்வுகள் அதிகம் தான். மறுபரிசீலனை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துவங்கினால் நாட்டு மக்களின் நலன் காக்கப்படும். தயவுசெய்து மக்கள் மத்தியில் தங்கள் மதிப்பு குறையும் என நினைத்து தளர்வு வேண்டாம். நீங்கள் இப்போது எடுக்கும் கண்டிப்பான திட்டமிடல் ‌வருங்காலத்தில் மக்களிடையே உங்கள் மேல் மதிப்பைக் கூட்டும். நல்ல நிர்வாகம் தெரிந்த அதிகாரிகள் உங்களிடம் இருக்கிறார்கள். நிறைய எதிர் பார்க்கிறோம்.
Rate this:
Cancel
ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா
25-ஜூன்-202122:12:54 IST Report Abuse
ஊழல் விஞ்ஞானி மீண்டும் டெல்டாவை பரப்ப திட்டம் தயார்......கடவுளே
Rate this:
Cancel
25-ஜூன்-202121:51:36 IST Report Abuse
பார்த்தி மூன்றாம் அலையை வெகு விரைவில் வரவழைக்கும் .... தமிழக அரசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X