சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

விஷப் பரிட்சை!

Added : ஜூன் 25, 2021
Share
Advertisement
விஷப் பரிட்சை!'பதவி ஆசையை காட்டி, நம் தலைவியை நடு ரோட்டில் நிறுத்தி விட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறார் போலிருக்கிறது...' என, தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரைப் பற்றி கவலையுடன் கூறுகின்றனர், திரிணமுல் காங்., நிர்வாகிகள். கடந்த 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு தேர்தல் வியூக நிபுணராக இருந்து, அந்த கட்சி ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் பிரஷாந்த்


அக்கம் பக்கம்


விஷப் பரிட்சை!



'பதவி ஆசையை காட்டி, நம் தலைவியை நடு ரோட்டில் நிறுத்தி விட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறார் போலிருக்கிறது...' என, தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரைப் பற்றி கவலையுடன் கூறுகின்றனர், திரிணமுல் காங்., நிர்வாகிகள். கடந்த 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு தேர்தல்
வியூக நிபுணராக இருந்து, அந்த கட்சி ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் பிரஷாந்த் கிஷோர். அதற்கு பின், பா.ஜ.,வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த கட்சி தலைவர்களுடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறார். பா.ஜ.,வை கடுமையாக எதிர்க்கும் திரிணமுல், தி.மு.க., போன்ற கட்சிகளுக்கு, சமீபத்திய சட்டசபை தேர்தலில் வியூகம் வகுத்துக் கொடுத்து, அதில் வெற்றியும் பெற்றுத் தந்துள்ளார். இந்த வெற்றி, பிரஷாந்த் கிஷோருக்கு அதீத நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது போலிருக்கிறது. 'வரும் 2024ல், நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் மோடிக்கு எதிராக, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிற்பதற்கு நீங்கள் தான் தகுதியான நபர். உங்களை பிரதமர் நாற்காலியில்
அமர வைக்காமல் ஓயமாட்டேன்' என, மம்தாவிடம் கூறியுள்ளார் பிரஷாந்த் கிஷோர். மம்தாவும், அவரை முழுமையாக நம்பி விட்டார். திரிணமுல் கட்சியினரோ, 'மேற்கு வங்கத்தை தாண்டினால், பல மாநிலங்களில் உள்ள மக்களுக்கு, மம்தா யாரென்றே தெரியாது. பிரஷாந்த் கிஷோரை நம்பி, நம் தலைவி விஷப் பரிட்சையில் இறங்குகிறாரே...' என, கவலைப்படுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X