பொது செய்தி

இந்தியா

உலக ஓட்டல் பிராண்டுகளில் முதலிடம் பிடித்த 'தாஜ்'

Updated : ஜூன் 26, 2021 | Added : ஜூன் 26, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி : உலகின் மிக வலிமையான ஓட்டல் பிராண்டாக, 'தாஜ்' தெரிவு செய்யப்பட்டிருப்பதாக,'டாடா' குழுமத்துக்கு சொந்தமான, 'இந்தியன் ஓட்டல் கம்பெனி' தெரிவித்துள்ளது.லண்டனை சேர்ந்த, 'பிராண்டு பைனான்ஸ்' எனும், பிராண்டுகளை மதிப்பிடும் நிறுவனம், அதன், '2021ல் 50 ஓட்டல்கள்' எனும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், உலகின் மதிப்பு வாய்ந்த மற்றும் வலிமையான ஓட்டல்கள் தர

புதுடில்லி : உலகின் மிக வலிமையான ஓட்டல் பிராண்டாக, 'தாஜ்' தெரிவு செய்யப்பட்டிருப்பதாக,'டாடா' குழுமத்துக்கு சொந்தமான, 'இந்தியன் ஓட்டல் கம்பெனி' தெரிவித்துள்ளது.



latest tamil news



லண்டனை சேர்ந்த, 'பிராண்டு பைனான்ஸ்' எனும், பிராண்டுகளை மதிப்பிடும் நிறுவனம், அதன், '2021ல் 50 ஓட்டல்கள்' எனும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், உலகின் மதிப்பு வாய்ந்த மற்றும் வலிமையான ஓட்டல்கள் தர வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. இதில், ஒட்டுமொத்த பிராண்டு வலிமை குறியீட்டில், 100க்கு 89.3 மதிப்பெண் பெற்று, முதலிடத்தை பெற்றுள்ளது, 'தாஜ்'. இந்த பிராண்டின் மதிப்பு 2,190 கோடி ரூபாய் ஆகும். மேலும் இந்த ஓட்டல், வாடிக்கையாளர் சேவையில், ஏ.ஏ.ஏ., எனும் மிகச் சிறப்பான தரத்தையும் பெற்றுள்ளது.கடந்த, 2016ம் ஆண்டில், 38வது இடத்தில் இருந்த இந்த ஓட்டல், அதன் பின் இப்போது, தரவரிசை பட்டியலில், முதல் முறையாக மீண்டும் சேர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


latest tamil news



இது குறித்து, 'பிராண்டு பைனான்ஸ்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ஹை கூறும்போது, “தாஜ் ஒரு நுாற்றாண்டு பாரம்பரியம் கொண்டதாகும். மேலும், இந்திய விருந்தோம்பல் துறையின் பாதுகாவலாகவும் அது இருக்கிறது. உலகளாவிய பயணிகளின் மதிப்பீட்டில், முதலிடத்திற்கு,'தாஜ்' வந்துள்ளது'' என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
26-ஜூன்-202115:31:39 IST Report Abuse
Loganathan Kuttuva லண்டனில் உள்ள ஓட்டலில் வெள்ளையர் அல்லாத டாடா அனுமதிக்கப்படாததால் இந்தியாவில் அதே போன்ற ஓட்டலை அமைத்தார் அது தான் தாஜ் .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
26-ஜூன்-202111:58:07 IST Report Abuse
g.s,rajan வாவ் தாஜ் ஜி,எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
26-ஜூன்-202110:02:37 IST Report Abuse
சுவாமி, Detroit, Michigan, USA நீ அங்கு ஒரு நாள் star hotel இல் தங்கி இருக்கிராயா.. $200 கொடுத்து உன்னால் stay பண்ண முடியுமா?? முடியாது. miindia.com இல் 1 dollarkum அரை பைசாவிற்கும் deal பாத்து வாழ்க்கை நடத்துவது எனக்கு தெரியும்.. சும்மா பிதற்றாதே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X