சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்க தேசத்தினர் 'ஆதார்' பெற்றது எப்படி? திருப்பூரில் விசாரணை தீவிரம்

Updated : ஜூன் 26, 2021 | Added : ஜூன் 26, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூரில் கைதான வங்க தேசத்தினர், சென்னை, சைதாப்பேட்டை கிளை சிறையில்அடைக்கப்பட்டனர். ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை எப்படி பெற்றனர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஷிமுல் காஜி, 30, சைபுல் இஸ்லாம், 40, மன்னமோலல், 31, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஏழு பிரிவுகளில் இவர்கள்
வங்கதேசத்தவர், ஆதார், திருப்பூர்

திருப்பூர்: திருப்பூரில் கைதான வங்க தேசத்தினர், சென்னை, சைதாப்பேட்டை கிளை சிறையில்அடைக்கப்பட்டனர். ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை எப்படி பெற்றனர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஷிமுல் காஜி, 30, சைபுல் இஸ்லாம், 40, மன்னமோலல், 31, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஏழு பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிந்து, 'ஆதார்' அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரையும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முடிவு வெளிவரும் வரை சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருப்பர். கைது செய்யப்பட்ட மூன்று பேருடன், யார் யார் தொடர்பில் இருந்தனர், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை எப்படி பெற்றனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மத்திய உளவு பிரிவினரும் விசாரித்து வருகின்றனர்.


latest tamil news





சம்பளத்தில் ‛கமிஷன்'


போலீசார் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளாக ஷிமுல் காஜி ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தங்கி வேலை செய்து வந்தார். மேற்கு வங்கத்தில் பெறப்பட்ட அடையாள அட்டையால், ஈரோட்டில் ‛ஆதார்' கார்டு பெற்றார். மற்ற இருவரும், இரண்டு ஆண்டுகளாக பொங்குபாளையம், ஊத்துக்குளியில் தங்கியிருந்தது தெரிந்தது. இரண்டு மாதம் முன், ஷிமுல் காஜி திருப்பூருக்கு வந்தார்.இவரிடம், திருப்பூர், ஈரோடு, கோவை பகுதியில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் தொடர்பில் இருந்தனர். திருப்பூரில் வேலை செய்யும் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள், தங்கள் சம்பளத்தை,வீட்டுக்கு ஷிமுல் காஜி மூலமாக அனுப்பி வந்தனர். இதற்கு ஒரு தொகையை கமிஷனாக பெற்று வந்தார். கைதான மூன்று பேரின், விபரங்களை மத்திய உளவு பிரிவினர் பெற்று விசாரித்து வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visu - Pondicherry,இந்தியா
29-ஜூன்-202107:56:48 IST Report Abuse
visu நாடு முன்னேற வேண்டுமென்றால் சீனா போன்று ஒரு பெற்றோருக்கு இரு குழந்தைகள் என்ற கட்டுப்பாடு மத பேதமின்றி அமுல் படுத்த பட வேண்டும்.CAA அமுல் படுத்த வேண்டும்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
29-ஜூன்-202105:52:00 IST Report Abuse
meenakshisundaram மம்தாவை விசாரிக்கவும்
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
28-ஜூன்-202122:26:57 IST Report Abuse
madhavan rajan காசு கொடுத்தால் இந்தியாவில் எதை வேண்டுமானாலும் வாங்கலாம். காரை தொட்டுக்கூட பார்த்திருக்காதவனுக்கெல்லாம் காரோட்ட லைசென்சு கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X