'கிரே' பட்டியலில் பாக்., நிதியுதவி பெறுவதில் சிக்கல்

Updated : ஜூன் 26, 2021 | Added : ஜூன் 26, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி ;பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்யப்படுவதை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்காததால், பாக்., தொடர்ந்து 'கிரே' பட்டியலில் நீடிப்பதாக, எப்.ஏ.டி.எப்., அமைப்பு தெரிவித்துள்ளது.ஐரோப்பாவைச் சேர்ந்த பிரான்ஸ் தலைநகர் பாரிசில், எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழு செயல்பட்டு வருகிறது. ஜி - 7' நாடுகள் இணைந்து உருவாக்கிய இந்தக் குழு, உலகளவில் நடக்கும்
 கிரே  பட்டியல் பாக்.,  நிதியுதவி பெறுவதில் சிக்கல்

புதுடில்லி ;பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்யப்படுவதை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்காததால், பாக்., தொடர்ந்து 'கிரே' பட்டியலில் நீடிப்பதாக, எப்.ஏ.டி.எப்., அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவைச் சேர்ந்த பிரான்ஸ் தலைநகர் பாரிசில், எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழு செயல்பட்டு வருகிறது.

ஜி - 7' நாடுகள் இணைந்து உருவாக்கிய இந்தக் குழு, உலகளவில் நடக்கும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.


latest tamil news



இக்குழுவின் 'கிரே' பட்டியலில் 2018ல் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிப்பது, பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்வதை தடுக்காதது போன்ற காரணங்களால் இந்த பட்டியலில் பாக்., இடம் பெற்றது.
இதனால் சர்வதேச நிதியுதவியை பெற முடியாத நிலைக்கு பாக்., தள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகள் மீது, பாக்., சில நடவடிக்கைகளை எடுத்தது.
இதையடுத்து, 'எப்.ஏ.டி.எப்., குழு அளித்த 27 செயல் திட்டங்களில் 26 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் விரைவில் பழுப்பு பட்டியலில் இருந்து பாக்., நீக்கப்படும்' பாக்., அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எப்.ஏ.டி.எப்., தலைவர் மார்கஸ் பிளைர் கூறியதாவது:பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்குவதை தடுக்க, பாக்., குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எனினும் 27 திட்டங்களில் மூன்று திட்டங்களை இன்னும் முழுமையாக செய்து முடிக்காமல் உள்ளதால், பாக்., 'கிரே' பட்டியலில் தொடர்ந்து நீடிக்கிறது.இவ்வாறு அவர்
கூறினார். இது, பாக்.,கிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-ஜூன்-202117:27:36 IST Report Abuse
J.V. Iyer பாகிஸ்தானுக்கு ஏது கவலை? ஒவ்வொரு ஊராக ஸ்ரீலங்காவைபோல சீனாக்காரனிடம் அடகு வைப்பார்கள்.
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-202112:33:02 IST Report Abuse
Paraman இந்த FATF என்ற ஐக்கிய நாட்டு அமைப்பே WHO போல ஒரு விலைபோன அமைப்பு. இதில் இருப்பவர்களே அனைவரும் டுபாக்கூர் மற்றும் கருப்பு பண முதலைகளின் கைக்கூலிகள். கடந்த 4.ஆண்டுகளுக்கும் மேல் இந்த FATF. திருடர்கள் பக்கிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்ப்பதாக வெத்து உதார் விட்டு கொண்டு இருக்கிறார்களே தவிர உருப்படியாக ......
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
26-ஜூன்-202112:00:57 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் அனுப்ப தொடர்ந்து குரல் கொடுப்போம். இதில் நம் வெளியுறவு துறை வெற்றி பெறும் வரை தொடர்ந்து தீர்மானக செயல் படவேண்டும். பாகிஸ்தானை மூன்று துண்டுகளாக பிரித்து நம்மிடமும் உலக நாடுகளிடம் பிச்சை எடுக்க வைக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X