பொது செய்தி

தமிழ்நாடு

குறைகளை தீர்ப்பதில் மதுரை கோட்டம் முதலிடம்

Updated : ஜூன் 26, 2021 | Added : ஜூன் 26, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மதுரை : ரயில் பயணிகளின் குறைகளை தீர்ப்பதில் தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டம் முதலிடம் பெற்று சாதித்துள்ளது.பயணிகள் குறைகளை தெரிவிக்க பல்வேறு வழிமுறைகள் ரயில்வேயில் உள்ளன. அதில் முக்கியமானது ரயில் மதாத் என்ற அலைபேசி செயலி. இச்செயலியை கூகுல் பிளேஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த செயலியில் புகார்கள் பதிவு செய்யப்பட்ட வுடன், உடனடியாக அவை

மதுரை : ரயில் பயணிகளின் குறைகளை தீர்ப்பதில் தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டம் முதலிடம் பெற்று சாதித்துள்ளது.latest tamil newsபயணிகள் குறைகளை தெரிவிக்க பல்வேறு வழிமுறைகள் ரயில்வேயில் உள்ளன. அதில் முக்கியமானது ரயில் மதாத் என்ற அலைபேசி செயலி. இச்செயலியை கூகுல் பிளேஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த செயலியில் புகார்கள் பதிவு செய்யப்பட்ட வுடன், உடனடியாக அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பப்படும். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய பதிலை குறுஞ்செய்தி மூலம் புகார் செய்தவர்களுக்கு அனுப்பி விடுவர்.


latest tamil newsசமூக வலைதளங்கள் மற்றும் மற்ற வழிகளில் செய்யப்படும் புகார்களும் இச்செயலி மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது.இச்செயலி மூலம் பயணிகள் புகார்களை மதுரை கோட்டம் சராசரியாக 31 நிமிடங்களில் தீர்வு கண்டு தெற்கு ரயில்வேயில் முதலிடம் பிடித்துள்ளது. இதற்காக குறை தீர்ப்பு பிரிவு அதிகாரியான கூடுதல் கோட்ட மேலாளர் லலித்குமார் மன்சுகானி, அலுவலர்களுக்கு கோட்டமேலாளர் லெனின் பாராட்டு தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் நான் கனரா வங்கியில் கணக்கு தொடங்க கடந்த 14 ஆம் தேதி மனு கொடுத்தேன் இந்த நிமிடம் வரை கணக்கு தொங்கவேயில்லை கணக்கு எங்கோ மத்திய அலுவலகத்தில்தான் தொடங்குவதாக சொல்கிறார்கள் ஒரு RD பணம் போட முடியவில்லை நடையாய் நடக்கிறேன் இதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியாவோ?
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் ரயில்வே குறைகள் என்றாலே ஆளாளுக்கு கருத்து போடுவதில் மும்முரமாகி விடுகிறார்கள் ஒருகாலத்தில் CONSUMER DISPUTES REDRESSAL FORUM (CDRF) இருந்தது (இப்போது அதெல்லாம் அழிக்கப் பட்டு விட்டது நமக்கு என்ன கஷ்டம் வந்தாலும் கேஸ் போட முடியாது என்பதே இன்றைய நாட்டின் நிலை) எதற்கெடுத்தாலும் வழக்குதான் போடுவார்கள் ஒரு வழக்கு - திருச்சியில் முதலாளி ஒருவர் சென்னையிலிருந்து திருச்சிக்கு (RETURN) டிக்கட் வாங்கிவர சொல்லி ஆளனுப்பினார் அந்த ஆள் திருச்சி சென்னை டிக்கட் வாங்கி வந்து கொடுத்தான் அதையெல்லாம் பெரிய மனிதர்கள் பார்க்க முடியுமா ஆனால் டிக்கட் பரிசோதகர் அபராதம் போடாமல் விடுவாரா கம்பளைண்ட் செய்ய அவரென்ன சின்ன ஆளா வக்கீலிடம் சொல்லி மறுநாளே கேஸ் போட்டாச்சு ரயில் உறுதிகாரிக்கு சம்மன் என்னவென்று பார்த்தால் முன்பதிவு அப்ளிகேஷன் திருச்சி சென்னை டிக்கெட்தான் கேட்டிருக்கிறது அதை கொண்டுபோய் நீதி மன்றத்தில் காட்டினார்கள் நீதிபதி வழக்கு செலவு ரூ 500 கட்ட சொல்லி தீர்ப்பளித்தார்
Rate this:
Cancel
R Hariharan - Hyderabad,இந்தியா
26-ஜூன்-202109:57:57 IST Report Abuse
R Hariharan என்ன குறைகளை தீர்த்து வைத்தயல் என்று கூற முடியுமா. எனது குறைகள் ஒன்று கூட பதில் இல்லை. தென்னக ரயில் வாரியம் சென்னை எனது குறைகளாலுக்கு அக்கன்தோலெட்ஜ்மெண்ட் வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X