அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வரை இப்படி அழைக்கலாமே! அர்ஜுன் சம்பத் புது விளக்கம்

Updated : ஜூன் 26, 2021 | Added : ஜூன் 26, 2021 | கருத்துகள் (217)
Share
Advertisement
கோவை : 'முதல்வர் என்பதற்கு பதிலாக, 'ஆலோசனைக்குழு தலைவர்' என ஏன் அழைக்கக் கூடாது,'' என்று, ஹிந்து மக்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீப காலமாக, மத்தியிலுள்ள பா.ஜ., அரசை, 'மத்திய அரசு' என்று குறிப்பிடுவதை தவிர்த்து, 'ஒன்றிய அரசு' என்று, தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள்
CM Stalin, Arjun Sampath, IMK

கோவை : 'முதல்வர் என்பதற்கு பதிலாக, 'ஆலோசனைக்குழு தலைவர்' என ஏன் அழைக்கக் கூடாது,'' என்று, ஹிந்து மக்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீப காலமாக, மத்தியிலுள்ள பா.ஜ., அரசை, 'மத்திய அரசு' என்று குறிப்பிடுவதை தவிர்த்து, 'ஒன்றிய அரசு' என்று, தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.'டிவி' செய்தி வாசிப்பின்போதும் சில சேனல்கள் தவிர, மற்றவை 'ஒன்றிய அரசு' என்றே குறிப்பிடுகின்றன.


latest tamil news



அதே போல், ஸ்டாலினை முதல்வர் என்று தான் அழைக்க வேண்டும் என்பது சட்டம் அல்ல; அவரை ஆலோசனைக் குழு தலைவர் என்றும் அழைக்கலாம். அவர் கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவின் தலைவர் தான். இறுதி முடிவு கவர்னரிடம் தான் உள்ளது. இதை நான் சொல்லவில்லை; இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு - 163 சொல்கிறது.

அதனால், இனிமேல் சட்டப்படி, 'ஆலோசனைக்குழு தலைவர் ஸ்டாலின் அவர்களே' என அழைக்கலாம். 'ஒன்றிய அரசு' சரி என்று ஏற்றுக்கொள்பவர்கள், இதையும் ஏற்க வேண்டும். இவ்வாறு, அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (217)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - Chennai,இந்தியா
02-ஜூலை-202113:20:35 IST Report Abuse
Bala இருக்கிற வேலைய ஒழுங்கா செய்யாம, துறைகளுக்கு பெயர் மாற்றுவது இந்திய மத்திய அரசுக்கு பெயர் மாற்றுவது, இதெல்லாம் வக்கிரத்தின் பிரதிபலிப்பு. இது தி.மு.க வின் பரம்பரை குணம்.
Rate this:
Cancel
Truth Triumph - Coimbatore,இந்தியா
01-ஜூலை-202121:29:19 IST Report Abuse
Truth Triumph சபாஷ் சரியான பதிலடி ...
Rate this:
Cancel
K.P SARATHI - chennai,இந்தியா
01-ஜூலை-202118:51:48 IST Report Abuse
K.P  SARATHI மத்தியில் பல மாநிலங்களின் ஆதரவில் ஆட்சி அமைத்தல் ஒன்றிய அரசு எனலாம். ஆனால் தனி பெருபான்மை உள்ள அரசை மத்திய அரசு என்று தன சொல்ல வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X