' நானும் கிரிக்கெட் வீரன் தான் ' - முதல்வர் ஸ்டாலின்

Updated : ஜூன் 26, 2021 | Added : ஜூன் 26, 2021 | கருத்துகள் (89) | |
Advertisement
சென்னை: சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி போடும் நகழ்ச்சியை துவக்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளால் நாட்டிற்கு பெருமை. வீரர்கள், தனித்தனியாக இருந்தாலும் போட்டிகளில் பங்கேற்க அணி ஒற்றுமை மிகவும் முக்கியம். வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. விளையாட்டு
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி போடும் நகழ்ச்சியை துவக்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளால் நாட்டிற்கு பெருமை. வீரர்கள், தனித்தனியாக இருந்தாலும் போட்டிகளில் பங்கேற்க அணி ஒற்றுமை மிகவும் முக்கியம். வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு உடல் திறனும், மன திடமும் இருக்க வேண்டும்.

விளையாட்டு வீரர்கள் அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் தரக்கூடியவர்கள். விளையாட்டு துறையை விளையாட்டாக எடுத்து கொண்டால், விளையாட்டாக போய் விடும். விளையாட்டாக போய் விடக்கூடாது என்பதால் தான், விளையாட்டு துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் . அதன் பின் பேசிய அவர் , ஜப்பானில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 7 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர் . தங்கம் , வெள்ளி , வெண்கல பதக்கங்கள் வெல்பவர்களுக்கு தலா ரூ 3, 2,1 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றார் . ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ளும் வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ 25 வரை செலவு செய்யப்படுவதை குறிப்பிட்டார் . பள்ளி பருவத்திலும் , மேயராக இருந்த போதும் கிரிக்கெட் உட்பட விளையாட்டு போட்டிகளில் கலந்துக்கொண்டு இருக்கிறேன் . வீரர்களின் தேவை எனக்கு தெரியும் . அவை அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார் .

விளையாட்டு போட்டிகள் குறித்து குழந்தை பருவத்திலேயே ஊக்குவிக்க வேண்டும். நானும் பள்ளி பருவத்தில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். சென்னை மேயர், துணை முதல்வராக இருந்த போது கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். வீரர்களுக்கு என்ன தேவை என்ன என்பது எனக்கு தெரியும். வீரர்களின் தேவை நிறைவேற்றப்படும். உலக அளவில், இந்தியாவிற்கு பெருமை சேர்க்க தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சாதனை படைக்க வேண்டும்.



பதக்கம் வென்றால் பரிசு


ஜப்பானில் ஒலிம்பிக் தமிழகத்தில் 7 பேர் பங்கேற்பதில் மகிழ்ச்சி. தமிழகத்தில், 4 ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக உறுதி அளித்தது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். சர்வதேச போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு ரூ.25 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது.


latest tamil news



ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். உங்கள் நலன் பேணி காக்கப்படும். உங்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சோணகிரி - குன்றியம்,இந்தியா
27-ஜூன்-202113:58:03 IST Report Abuse
சோணகிரி மைதானத்தில் ஒரு சிங்கிள் ரன் எடுக்கவே வழியில்லை... பேட்டிங்கே தெரியாது... ஆனால்... சிக்ஸர் சிக்ஸர் என்று அடிமை ஊடகங்கள் கரகோஷம் எழுப்புகின்றன...
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
27-ஜூன்-202110:03:15 IST Report Abuse
vbs manian வேறு என்ன என்ன விளையாட்டுகள் தெரியும்.
Rate this:
சோணகிரி - குன்றியம்,இந்தியா
28-ஜூன்-202119:14:10 IST Report Abuse
சோணகிரி தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் விளையாட தெரியும்......
Rate this:
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
27-ஜூன்-202108:38:49 IST Report Abuse
arudra1951 நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X