அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் நீட் தேர்வு: பழனிசாமி கேள்வி

Updated : ஜூன் 26, 2021 | Added : ஜூன் 26, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
சென்னை: ‛‛ நடப்பு ஆண்டு நீட் தேர்வு தமிழகத்தில் நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது'' என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக
NEET exam, TN, Tamilnadu, medical entrance test, தமிழகம், நீட், நீட் தேர்வு, அதிமுக, பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி, palanisamy, edapadi palanisamy,

சென்னை: ‛‛ நடப்பு ஆண்டு நீட் தேர்வு தமிழகத்தில் நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது'' என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக மாணவர்களுக்கு திமுக வாக்குறுதி அளித்தது. சட்டசபை கூட்டத்தொடரில், இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா? இல்லையா? என கேள்வி எழுப்பினேன். நீட் இருப்பின் அதற்கு மாணவர்கள் தயார் ஆக வேண்டுமா? வேண்டாமா ? என கேட்ட போது முதல்வர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.

தற்போதைய அரசின் முடிவால், நடப்பு ஆண்டு நீட் தேர்வு தமிழகத்தில் நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? என மாணவர்கள் தவித்து வருகின்றனர்.


latest tamil news
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, இந்த ஆண்டு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் விலக்கு பெற்றே தீருவோம் என்று வாக்குறுதி தந்த இந்த அரசு நியமித்து உள்ள நீதிபதி ஏகே ராஜன் தலைமையிலான கமிஷன் பரிந்துரைகள் வருவதற்கு முன்பு தமிழக மாணவர்கள் நீட்தேர்வில் பங்கேற்பதா வேண்டாமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-ஜூன்-202104:38:39 IST Report Abuse
meenakshisundaram அதை போல தமிழனுக்கு அமெரிக்க போன்ற நாடுகள் நடத்தும் ஜீஆர் ஈ டோபல் தேர்வுகளும் சிங்கப்பூர் மருத்துவ நுழைவு தேர்வுகளும் கூடாதுன்னு அவரவர் தூதரகங்களில் மனு கொடுக்கவும் (வேல் முருகன் போன்ற ஆட்கள் இதற்க்கு உதவலாம் )போராட்டம் நடத்தவும் செய்யலாம் .தமிழன் பெருமை கடக்க உதவும் .
Rate this:
Cancel
S.SRINIVASAN - Chennai,இந்தியா
27-ஜூன்-202101:48:18 IST Report Abuse
S.SRINIVASAN டக்ளஸ் தியாகு கிட்ட கேட்டால் வாயில் வடைசுட்டு ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி யில் போய் விப்பாறு முடியலைன்னா நீட் தேர்வுக்கு பதிலாக GRE எழுதி வெளிநாட்டுல போய் வட சுடச்சொல்லுவாரு. அங்க இருக்கிற கம்பெனிய திவாலாக்கிட்டு வந்தா அவர் கட்சியில் முதல்வர் பதவி தரேன்னு சொல்லுவாரு. கூடவே நீட் தேர்வை எழுத பக்கத்து தெருவுல இருக்கிற பிள்ளைகளை எழுத சொல்லி தற்கொலைக்கும் தூண்டி விட்டுட்டு மத்திய அரசின் சதிவேலையில் தமிழகத்தில் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று பொய்யை சொல்லி தன் சகாக்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வை ரத்து செய்தால் பணக்கார பிள்ளைகளுக்கே மெடிக்கல் சீட் கிடைக்க வழி செய்யாதீர்கள். நீட் தேர்வை ரத்து செய்தால் இந்த திருட்டு கும்பல் இந்த ஐந்து வருடத்தில் நல்லா காசு பார்த்து விடுவார்கள். திரு எடப்பாடி அண்ணன் அவர்களே இந்த மூடர்களின் பேச்சை கேட்டு நீட் தேர்வை தயவு செய்து ரத்துச் செய்ய சொல்லவேண்டாம். அதற்கு பதிலாக கிராமத்து பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அவர்கள் அந்தந்த ஸ்கூல் தரவரிசை பட்டியலில் இருந்து முதல் ஐந்து பேரை தேர்வு செய்ய தரவரிசையில் முதல் ஐந்து பேரை தேர்வு செய்து மருத்துவம் படிக்க அட்மிஷன் போடுங்கள். கிராமத்து மாணவ மாணவிகள் இந்த தேசத்து மக்களை நோயின்றி வாழ வகை செய்வார்கள். அனைத்து அரசு பள்ளிகளிலும் நீட் தேர்வு பயிற்சி கொடுக்க வேண்டும். மேலும் தனியார் பள்ளிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் அப்போது தான் சமத்துவம் மற்றும் சமூக நீதி காக்கப்படும்
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
26-ஜூன்-202123:13:16 IST Report Abuse
unmaitamil எதிர்க்கட்சிகள் யாரும் கேள்வி கேட்க வேண்டாம். இவர்களை நம்பி ஏமாந்து ஓட்டுப்போட்ட மக்கள் கேள்வி கேட்பார்கள் . அப்போதுதான் மக்களுக்கு இவர்களின் பொய்கள் தெரியவரும். மக்களும் உண்மைகளை உணருவார்கள்.
Rate this:
SKANDH - Chennai,இந்தியா
28-ஜூன்-202117:34:24 IST Report Abuse
SKANDH அப்படி மக்கள் கேட்கும்போது அந்த 2 ACRE பத்தியும் கேட்க சொல்லுங்க . இந்த குடும்பம் மக்களை ஏமாத்தி ஏமாத்தியே ஒட்டு வாங்குதே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X