தமிழகத்தை திரும்பி பார்க்க செய்வோம்: கமல் பேச்சு

Updated : ஜூன் 26, 2021 | Added : ஜூன் 26, 2021 | கருத்துகள் (33)
Advertisement
சென்னை : ‛‛உள்ளாட்சி தேர்தல் மூலம் தமிழகத்தை திரும்பி பார்க்க செய்வோம்'', என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்.சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். துணை தலைவர் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகிச் சென்ற நிலையில், இன்று(ஜூன்26) கட்சியின்
kamal, kamalhaasan, MNM, கமல், கமல்ஹாசன், மக்கள்நீதிமய்யம், மநீம,

சென்னை : ‛‛உள்ளாட்சி தேர்தல் மூலம் தமிழகத்தை திரும்பி பார்க்க செய்வோம்'', என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். துணை தலைவர் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகிச் சென்ற நிலையில், இன்று(ஜூன்26) கட்சியின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் மத்தியில் 'ஆன்லைன்' வழியாக, பேசினார். அப்போது உள்ளாட்சி தேர்தல், புதிய நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி பேசினார்.


மநீமவில் கமலுக்கு 2 பதவிகள்

latest tamil newsஅப்போது கமல் பேசுகையில், கட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள், உடனடியாக தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டியது அவசியம். மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களை செய்திருக்கிறேன். அதன்படி, கட்சியின் தலைவர் பொறுப்புடன் கூடுதலாக, பொது செயலர் பொறுப்பையும் ஏற்று பணியாற்ற இருக்கிறேன். உள்ளாட்சி தேர்தல் மூலம் தமிழகத்தை திரும்பி பார்க்க செய்வோம். 2024 ம் ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தலுக்கு இப்போதே தயாராகி விட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.


நிர்வாகிகள் நியமனம்


இந்த கூட்டத்தின் போது, கட்சிக்கு சில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கமல் கூறினார்அதன்படி,
01. அரசியல் ஆலோசகர்களாக - பழ.கருப்பையா, பொன்ராஜ் வெள்ளைச்சாமியும்
02. கட்டமைப்பு துணைத்தலைவராக ஏ.ஜி. மெளரியாவும்
03. களப்பணி மற்றும் செயல்படுத்துதல் துணைத்தலைவராக தங்கவேலுவும்
04. தலைமை நிலைய மாநில செயலாளராக சரத்பாபுவும்
05. தகவல் தொழில்நுட்பம் மற்றும் செய்தி தொடர்பு மாநில செயலாளராக செந்தில் ஆறுமுகமும்
06. கட்டமைப்பு மாநில செயலராக சிவ.இளங்கோவும்
07. நிர்வாக குழு உறுப்பினராக ஸ்ரீபிரியாவும்
08. நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளராக நாகராஜனும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சில அறிவிப்புகள் இனி வரும் நாட்களிலும் வெளியாகும் எனவும் கமல் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
27-ஜூன்-202118:25:47 IST Report Abuse
Poongavoor Raghupathy பழ கருப்பு பல பார்ட்டிகளை சுற்றிவிட்டு கமலஹாசன் வலையில் வந்து மாட்டி இருக்கிறார். நன்றாக பேச கூடியவர் உதவாக்கரை கட்சியில் வந்து மாட்டி இருப்பது வேதனை அளிக்கிறது. பணத்தைக்கட்டி பழத்தை கூட்டிக்கொண்டாரோ கமல் இருக்கலாம் பணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை தமிழ்நாட்டில். பழம் கொஞ்ச காலம் தான் கமலுடன் ஓட்ட முடியும். கமலின் பேச்சை புரிந்து கொள்ளவே பழம் கஷ்டப்படுவார். எவ்வளவு காலம் பழம் கமலுடன் செல்கிறார் என்று பார்ப்போமே.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
27-ஜூன்-202111:47:29 IST Report Abuse
Sridhar ஊராட்சி தேர்தல்லயும் நாறடிக்கணும், அப்போதான் எல்லோரும் திரும்பி பார்ப்பார்கள். எவ்வளோ அடிச்சாலும் தாங்கிகிட்டு திரும்ப திரும்ப அடி வாங்குறதுக்கு வரங்களேன்னு ஆச்சிரியமா பார்ப்பாங்க.
Rate this:
Cancel
Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-202111:03:35 IST Report Abuse
Seitheee பாவம்.. பித்துபிடித்துவிட்டால் என்ன செய்வது. இப்படி ஏதாவது உளறிக்கொண்டே இருக்க வேண்டியததுதான். உதவாகரைகளை ஒன்று சேர்த்துக்கொண்டு உறுபடாதவைகளை செய்துவது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X