பொது செய்தி

இந்தியா

பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வது ஏன்? முந்தைய அரசை கைகாட்டுகிறது ஆளும் கட்சி

Updated : ஜூன் 27, 2021 | Added : ஜூன் 26, 2021 | கருத்துகள் (62)
Share
Advertisement
பெட்ரோல், டீசல் விலை எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 4ம் தேதிக்கு பின், பெட்ரோல், டீசல் விலை, 24 முறை அதிகரித்து, முன் எப்போதும் இல்லாத அளவில் உயர்ந்துள்ளது. சில நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. 'முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்திய திட்டங்களே விலை உயர்வுக்கு காரணம்' என, ஆளும் தரப்பு
பெட்ரோல், விலை, ராக்கெட் வேகம், உயர்வு,முந்தைய அரசு, ஆளும் கட்சி

பெட்ரோல், டீசல் விலை எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 4ம் தேதிக்கு பின், பெட்ரோல், டீசல் விலை, 24 முறை அதிகரித்து, முன் எப்போதும் இல்லாத அளவில் உயர்ந்துள்ளது. சில நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. 'முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்திய திட்டங்களே விலை உயர்வுக்கு காரணம்' என, ஆளும் தரப்பு குற்றம் சாட்டுகிறது.

பெட்ரோலிய பொருட்களை பொறுத்தவரை இறக்குமதியை நம்பியே இந்தியா உள்ளது. உலகிலேயே அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது. நாட்டின் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய, 82 சதவீதத்துக்கு மேல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. அதை சுத்திகரித்து, பல்வேறு பெட்ரோலிய பொருட்களாக வினியோகம் செய்யப்படுகிறது.


வரி விதிப்பு


சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஓராண்டில் மிக கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம், கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை, 2,300 ரூபாயாக இருந்தது. தற்போது, 5,021 ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் பல நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.


இதற்கு என்ன காரணம்?


மத்திய, மாநில அரசுகளுக்கு பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்புகளால் கிடைக்கும் வருவாய் தான், பிரதான வருமானமாக உள்ளது. அதனால் தான் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் தயங்குகின்றன.பெட்ரோல் விலையில், 58 சதவீதமும், டீசல் விலையில், 52 சதவீதமும் வரியாக உள்ளது. மத்திய அரசுக்கு, 2020 - 21 நிதியாண்டில் பெட்ரோல், டீசல் வரி விதிப்பு வாயிலாக, 3 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல் மீதான கலால் வரி விதிப்பால் கிடைக்கும் வருமானம், 167 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014 - 15ம் ஆண்டில் பெட்ரோல் மீதான கலால் வரி விதிப்பால், 29 ஆயிரத்து, 270 கோடி ரூபாய் கிடைத்தது.கடந்த, 2019 - 20ம் ஆண்டில், 78 ஆயிரத்து, 230 கோடி ரூபாயாகவும், 2020 - 21ம் நிதியாண்டில், ஏப்ரல் - ஜனவரி வரை, 89 ஆயிரத்து, 575 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதேபோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பால் மத்திய அரசுக்கு, 2019 - 20ம் ஆண்டில், 1 லட்சத்து, 23 ஆயிரத்து, 166 கோடி ரூபாய் கிடைத்தது. 2020 - 21ம் நிதியாண்டில், ஏப்ரல் - ஜனவரி வரை, 2 லட்சத்து, 4,906 கோடி ரூபாயாக இது அதிகரித்துள்ளது.


முடியாத நிலை


மாநில அரசுகளுக்கு விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி ஆகியவை வழியாக, 2014 - 15ம் ஆண்டில், 1 லட்சத்து, 37 ஆயிரத்து, 156 கோடி ரூபாய் கிடைத்தது.இதுவே, 2019 - 20ம் நிதியாண்டில், 46 சதவீதம் அதிகரித்து, 2 லட்சத்து, 493 கோடி ரூபாய் கிடைத்தது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு முடிவு செய்வதில்லை. எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்கின்றன. கடந்த, 2017 முதல் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை, சுத்திகரிப்பு செலவு, மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்பு, வினியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கமிஷன், போக்குவரத்து செலவு என, அனைத்தையும் கணக்கிட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் மீதான அதிக வரி விதிப்பையும், அதன் விலை அதிகரித்துள்ளதையும், மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பால் கிடைக்கும் வருவாய், மக்கள் நல திட்டங்களுக்கு செலவழிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதை மறுக்க முடியாது. ஆனால், வரிகளை குறைக்க முடியாத நிலையில் அரசு உள்ளது.


latest tamil news


மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல் படுத்திய எண்ணெய் கடன் பத்திர திட்டமே இதற்கு காரணம். இந்த கடன் பத்திரங்கள், இப்போது முதிர்வடையத் துவங்கியுள்ளன. இந்த நிதி ஆண்டில் மட்டும் எண்ணெய் நிறுவனங்களுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் திருப்பித் தர வேண்டியுள்ளது. 2021, 2023, 2024, 2025, 2026 ஆகிய நிதி ஆண்டுகளில் இந்த கடன் பத்திரங்கள் முதிர்வடைகின்றன.

மொத்த கடன் பத்திர அளவு, 1.30 லட்சம் கோடி ரூபாய். எண்ணெய் நிறுவனங்கள், அரசிடமிருந்து பெற வேண்டிய மானிய தொகைக்கு பதிலாக கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளன. சந்தை விலையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யும்படி எண்ணெய் நிறுவனங்களை, மன்மோகன் அரசு வலியுறுத்தியது. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, இந்த கடன் பத்திரங்கள் வாயிலாக ஈடு செய்யப்பட்டுள்ளது. மானிய பற்றாக்குறையை சமாளிக்க, மிகவும் சாதுர்யமாக இந்த கடன் பத்திர யோசனை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக அரசு உயர் அதிகாரிகள், பொருளாதார ஆலோசகர்கள், ரிசர்வ் வங்கி கவர்னர் ஆகியோர் இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அடுத்து வரும் அரசுக்கு பொறுப்பை தள்ளிவிடும் போக்கில், இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் மறுத்துஉள்ளன. 'சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது அதன் பலனை மக்களுக்கு வழங்காமல், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை கடந்த ஆண்டு மார்ச்சில் மோடி அரசு உயர்த்தியது. விலை உயர்வுக்கு இது தான் காரணம்' என, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது உண்மை. கடந்த மே 4ம் தேதிக்குபின், 24 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் உட்பட பலவற்றின் விலை, கடந்த இரண்டு மாதங்களில் மிகவும் அதிகரித்துள்ளது.மாநில தலைநகரங்களில் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் கடந்த மாதம், 12ல், லிட்டர் பெட்ரோல் விலை, 100 ரூபாயை எட்டியது.


எதிர்ப்பு



அதுபோல் மெட்ரோ நகரங்களில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த, 29ல் முதல் முதலில், பெட்ரோல் விலை சதம் அடித்தது. இன்னும் சில நாட்களில் நாடு முழுதும் லிட்டர் பெட்ரோல் விலை, 100 ரூபாயை கடந்துவிடும் என, அஞ்சப்படுகிறது. ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பெட்ரொல், டீசலை கொண்டு வந்தால் விலை குறையும் என கூறப்படுகிறது.

இதற்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.முந்தைய அரசின் தவறுகளை கூறி, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. அதனால் பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கான வழிகளை மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர் அரசியல் கட்சி தலைவர்கள்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
27-ஜூன்-202122:45:53 IST Report Abuse
m.viswanathan இதற்கு பதிலாக பழைய ஆட்சியாளர்களிடமே நாட்டை ஒப்படைத்து விடலாமே
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூன்-202115:55:35 IST Report Abuse
Saravanan மாநில அரசு எதற்கு தனியாக வரி போடவேண்டும் விலை வாசி உயர்வுக்கு மாநில அரசும்தான் காரணம் , வசதியாக அந்த உண்மையை மறைத்துவிட்டு மத்திய அரசு மீது பழி போட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது, எல்லா பெட்ரோல் விற்பனை நிலையத்திலும் வரி விகிதம் பற்றி ஒரு போர்டு வைத்தால் இவனுங்களின் புரளிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம், மத்திய அரசு அதனை செய்தால் இது போன்ற பொய் செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
27-ஜூன்-202118:08:13 IST Report Abuse
Rajaஅப்போ மாநில அரசு ஊழியர்களுக்கு யார் ஊதியம் கொடுப்பது....
Rate this:
Karthik - Dindigul,இந்தியா
27-ஜூன்-202120:05:15 IST Report Abuse
Karthikமாநில அறைக்கு ஊதியத்திற்குப் பெட்ரோல் வரியை நிர்ணயம் செய்திருக்கிறோம் என்று சொல்ல வேண்டியதுதானே? அதனால்தான் அவர்களுக்கு வேலை செய்யவில்லையென்றால் சம்பளம் தருகிறோம் என்றும் சொல்லவேண்டியதுதானே?...
Rate this:
Karthik - Dindigul,இந்தியா
27-ஜூன்-202120:49:50 IST Report Abuse
Karthikமாநில அரசு ஊதியத்திற்குத்தான் பெட்ரோல் வரியை நிர்ணயம் செய்திருக்கிறோம் என்று சொல்ல வேண்டியதுதானே? அதனால்தான் அவர்களுக்கு வேலை செய்யவில்லை என்றாலும் சம்பளம் தருகிறோம் என்றும் சொல்ல வேண்டியதுதானே?...
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
27-ஜூன்-202115:12:22 IST Report Abuse
Raj முந்தைய அரசை கைகாட்டுகிறது ஆளும் கட்சி - அது மத்திய அரசு சொன்னால் முட்டு கொடுபோம், மாநில அரசு சொன்னால் எதிர்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X