சூரியனை கடக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் படம்: நாசா வெளியீடு

Updated : ஜூன் 26, 2021 | Added : ஜூன் 26, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: பூமிக்கும் மேலே உள்ள சர்வதேச விண்வெளி நிலையம் சூரியனுக்கு எதிரே கடக்கையில் கொசு போல காட்சியளிக்கும் படத்தை நாசா விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ளது.பூமியிலிருந்து 410 கிலோ மீட்டர் உயரத்தில் தாழ் வட்டப் பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளின் கூட்டு முயற்சியாக இந்நிலையம் அமைக்கப்பட்டு

வாஷிங்டன்: பூமிக்கும் மேலே உள்ள சர்வதேச விண்வெளி நிலையம் சூரியனுக்கு எதிரே கடக்கையில் கொசு போல காட்சியளிக்கும் படத்தை நாசா விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ளது.



latest tamil news



பூமியிலிருந்து 410 கிலோ மீட்டர் உயரத்தில் தாழ் வட்டப் பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளின் கூட்டு முயற்சியாக இந்நிலையம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையத்தின் படம் ஒன்றை சமீபத்தில் அமெரிக்காவின் விர்ஜினியாவிலிருந்து எடுத்துள்ளனர். பிரம்மாண்ட மஞ்சள் ஆரஞ்சு வண்ண சூரியனுக்கு நடுவே கொசு போல சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட படத்தை லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்துள்ளனர்.
அப்படத்தை 7 பிரேம்களாக எடுத்து நாசா தொகுத்து வழங்கியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் விநாடிக்கு சுமார் 8 கி.மீ வேகத்தில் பயணிப்பதாகவும் நாசா கூறியுள்ளது.


latest tamil news



இப்புகைப்படம் எடுக்கப்பட்ட சமயத்தில் விண்வெளி வீரர்கள் ஷேன் கிம்பரோ மற்றும் தாமஸ் பெஸ்குவெட் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளது. ஸ்பேஸ்வாக் மூலம் அவர்கள் 6 மணி நேரம் 45 நிமிடங்கள் பணியாற்றி விண்வெளி நிலையத்திற்கு மின்சாரத்தை அதிகரிக்கும் சோலார் தகடுகளை பொருத்தியதாக கூறியுள்ளது..

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகி சுடலை மன்றம் இதெல்லாம் நம்புறா மாதிரியா இருக்கு
Rate this:
Indian - Vellore,இந்தியா
27-ஜூன்-202113:42:26 IST Report Abuse
Indianசிலை பால் குடிக்குது என்றால் நாம் நம்புவோம் இதை எல்லாம் நாங்கள் நம்ப மாட்டோம்...
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
26-ஜூன்-202122:39:07 IST Report Abuse
THINAKAREN KARAMANI ‘’ VERY INTERESTING PHOTO.’’ THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
26-ஜூன்-202122:00:37 IST Report Abuse
Balaji இதை முன்னின்று படம் எடுத்தது யார்? அல்லது இது சித்தரிக்கப்பட்ட காட்சியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X