பொது செய்தி

தமிழ்நாடு

ரத்தமா... தக்காளி சட்னியா? தி.மு.க., மற்றும் துதிபாடிகளின் ஓட்டு அரசியல்

Updated : ஜூன் 27, 2021 | Added : ஜூன் 26, 2021 | கருத்துகள் (55)
Share
Advertisement
'தங்களுக்கு தான் ஓட்டுப் போடுவார் என இருப்பவர்களுக்கு, ஒரு பிரச்னை என்றால், அது ரத்தம். அதே நேரத்தில், தங்களுக்கு சம்பந்தமில்லாதவனுக்கு ஒரு பிரச்னை என்றால், அது தக்காளி சட்னியா?' எனக் கேட்டு, தி.மு.க.,வின் நடவடிக்கைக்கு எதிராக கொந்தளிக்கிறார், இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத்.'இதென்ன ரத்தம்... தக்காளி பிரச்னை?' என, அர்ஜுன் சம்பத்திடமே கேட்டோம்.அவர்
ரத்தம், தக்காளி சட்னி, திமுக, துதிபாடிகளின், ஓட்டுஅரசியல்

'தங்களுக்கு தான் ஓட்டுப் போடுவார் என இருப்பவர்களுக்கு, ஒரு பிரச்னை என்றால், அது ரத்தம். அதே நேரத்தில், தங்களுக்கு சம்பந்தமில்லாதவனுக்கு ஒரு பிரச்னை என்றால், அது தக்காளி சட்னியா?' எனக் கேட்டு, தி.மு.க.,வின் நடவடிக்கைக்கு எதிராக கொந்தளிக்கிறார், இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத்.

'இதென்ன ரத்தம்... தக்காளி பிரச்னை?' என, அர்ஜுன் சம்பத்திடமே கேட்டோம்.
அவர் கூறியதாவது:


latest tamil newsசேலத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன். அப்பாவியான அவர், நண்பர்களோடு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரை சோதனை சாவடியில் மடக்கிய, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பெரியசாமி என்பவர், கம்பால் தாக்குகிறார்.'எந்த வம்புக்கும் போகாத என்னை ஏனய்யா அடிக்கிறீங்க'ன்னு முருகேசன் கேட்க, 'என்னை எதிர்த்தா கேள்வி கேட்கிறாய்?' என்று கேட்டு, கூடுதல் வலிமையோடு, அதே கம்பை வைத்து பெரியசாமி தாக்க, முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த சம்பவம், தமிழகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள், அரசியல்வாதிகள் என, யாரும் பெரிய அளவில், இந்த விஷயத்தை கண்டுகொள்ளவில்லை. இந்த அராஜக செயலை கண்டிக்க கம்யூனிஸ்ட்கள், அரசியல்வாதிகள் என, யாரும் முன்வரவில்லை. காரணம், நடப்பது தி.மு.க., ஆட்சி. இந்த ஆட்சியில், எந்த அராஜகம் நடந்தாலும், அவர்கள் கண்களுக்கு எட்டுவதுஇல்லை.ஓராண்டுக்கு முன், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தை, மகன் தாக்கப்பட்ட சம்பவத்தில், இருவரும் உயிர் இழந்தனர்.


கோரிக்கைஇந்த சம்பவத்தை தொடர்ந்து, சர்வதேச அளவில், மனித உரிமை அமைப்புகளும், இடதுசாரிகளும், சமூக ஆர்வலர்களும், தி.மு.க.,வும் என்னமாய் கொந்தளித்தனர்! ஏன்... விளையாட்டு வீரர்கள், இசையமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் என, பலரையும் சாத்தான் குளம் சம்பவத்துக்காக கொந்தளிக்க வைத்தனர்.

ஆனால், பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும், நியாயத்திற்காக குரல் கொடுக்க வேண்டுமா, இல்லையா?பென்னிக்ஸ் குடும்பத்தினரை பார்த்து, ஆறுதல் சொன்ன கட்சிகள், பணத்தை லட்சம் லட்சமாக அள்ளிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர் குடும்பத்தில் இருந்து, ஒருவருக்கு உடனடியாக, அரசு வேலை வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுப்பினர்.


எடுபிடிகள்அரசும் வேறு வழியின்றி, பிரச்னையை அமுக்கிப் போட, நிவாரணமும் கொடுத்து, குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலையும் கொடுத்தது.அப்போதைய அ.தி.மு.க., அரசு மீது, நடந்த சம்பவத்திற்கு பழி சுமத்தி, அரசியல் ஆதாயம் தேட முயன்ற தி.மு.க., முருகேசன் விஷயத்தில் மட்டும், அப்படியே அடங்கிப் போனது ஏன்? காரணம், அன்றைக்கு தி.மு.க., எதிர்க்கட்சி. அதுமட்டுமல்ல, சாத்தான்குளம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள்.


latest tamil newsசேலம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டது, ஒரு ஹிந்து வன்னியர். அதோடு, தி.மு.க., இன்றைக்கு ஆளும் கட்சி. அன்றைக்கு போராடியவர்கள் அனைவருமே, தி.மு.க., ஆதரவு எடுபிடிகள். இன்றைக்கு, தி.மு.க., ஆட்சி என்றதும், சாத்தான்குளம் சம்பவத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைவரும், அப்படியே, 'பம்மி' விட்டனர்.முருகேசன் குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் நிவாரணமாக, 10 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுப்பதாக அறிவிக்கவில்லை.அதேபோல, திருச்சிக்கு அருகில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சிறுவன் சுஜித் விஷயத்திலும் நடந்தது.

அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட, பல அரசியல் கட்சி தலைவர்களும் சுஜித் வீட்டுக்குப் போயினர்; ஆறுதல் கூறினர்; நிறைய பண உதவி செய்தனர்.த.மா.கா., தலைவர் வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், பல லட்சங்களை, சுஜித் குடும்பத்திற்கு அளித்தனர். சுஜித் போலவே, எத்தனையோ ஏழை ஹிந்து குடும்பத்து குழந்தைகள், ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்து போயுள்ளன. ஆனால், அங்கெல்லாம் இப்படிச் சென்று, எந்தத் தலைவரும் ஆறுதல் சொல்லவில்லை; பணமும் கொடுக்கவில்லை.


தற்கொலைசுஜித் விவகாரத்தைப் பொறுத்தவரை, ஆழ்துளை கிணற்றை ஒழுங்காக மூடாதது, அவரது பெற்றோர். அதனாலேயே விபத்து நடந்து, சுஜித் இறந்தான். நியாயப்படி, சுஜித்தின் பெற்றோர் மீது, போலீஸ் கொலை வழக்கு போட்டிருக்க வேண்டும். அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆறுதல் சொல்லச் சென்றபோது, சுஜித்தின் தாய், தன் பிள்ளையின் நினைவாக கோவில் கட்ட வேண்டும் என, கோரிக்கை வைத்தார்.

முதல்வருக்கும் அவர் கோரிக்கை வைத்தார்.இந்த விஷயத்தில், சுஜித்தோ அவரது குடும்பத்தினரோ செய்த தியாகம் என்ன என்ற கேள்வியை, யாரும் கேட்க முன்வரவில்லை. வேறு நாட்டில், இப்படியெல்லாம் நடந்திருந்தால், சுஜித்தின் பெற்றோர் மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்திருப்பர். இதை கேட்க யாரும் முன்வரவில்லை.

அதேபோலவே, 'நீட்' தேர்வுக்கு பயந்து, தற்கொலை செய்து கொண்ட அனிதா, ஏதோ தியாகம் செய்து விட்டவர் போல, அவரது வீட்டுக்குச் சென்று, அரசியல் செய்தனர். அவர் வீட்டுக்குப் போகாத அரசியல் தலைவர்கள் இல்லை. அனிதாவை, தியாகியாக நினைத்து, அவரது குடும்பத்தினருக்கு பணத்தை வாரி வழங்கினர்.அனிதாவைப் போல, 14 பேர், 'நீட்' தேர்வை எதிர்கொள்ள முடியாமல் பயந்து, தற்கொலை செய்துள்ளனர். ஆனால், அவர்கள் குறித்து தி.மு.க., வோ, அதன் துதிபாடிகளோ, சமூக ஆர்வலர்களோ கண்டு கொள்ளவில்லை.


இன்றைய அரசியல்தி.மு.க.,வினரும், அதன் துதிபாடிகளும், ஓட்டுக்காக ஜாதி,- மத அரசியலை தெளிவாக செய்து கொண்டிருந்தனர். இப்போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்து விட்டதால், கூஜா துாக்கிகளால் அரசியல் செய்ய முடியவில்லை.அதாவது,- தி.மு.க.,வுக்கு ஓட்டளிப்பவர்கள் என, கருதப்படுகிறவர் களுக்கு ஒன்று என்றால், அது ரத்தம். ஓட்டளிக்க மாட்டார்கள் என, கருதப்படுகிறவர்களுக்கு ஒன்று என்றால், அது தக்காளி சட்னி. இது தான், இன்றைய அரசியல்.இவ்வாறு, அர்ஜுன் சம்பத் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
28-ஜூன்-202111:03:40 IST Report Abuse
Swaminathan Chandramouli சிறிது காலத்துக்கு முன் அமெரிக்காவில் ஒரு போராட்டம் நடந்தது அப்போது ஒரு கறுப்பர் இனத்தை சேர்ந்த ஒருவர் போலீஸ்காரர்களால் ரவுண்டு கட்டப்பட்டு கீழே தள்ளப்பட்டார் அவர் போல்லீஸ் காரர்களிடம் கெஞ்சி தன்னை விட்டு விடும்படி அழுதார் அப்போது ஒரு போலீஸ் காரர் அவரது குரல்வளையில் தன முட்டிகாலை வைத்து பலமாக அழுத்தினார் அவ்வளவு தான் அந்தக்கருப்பர் மூச்சு திணறி இறந்து விட்டார் உடனே போலீஸ் காரர்கள் கைது செய்யப்பட்டனர் . சாவுக்கு காரணமான போலீஸ் மேலும் வழக்கு பதிய பட்டது வழக்கு சில காலம் நடந்தது கறுப்பரின் குரல்வளையை முட்டிகாலால் நெரித்த அந்த குறிப்பிட்ட போலீஸ் காரருக்கு ( சொன்னால் நம்ப மாட்டீர்கள் ) இருபது ஆண்டுகள் கடும் சிறை தண்டனை அளிக்க பட்டது ஆனால் நம் தமிழகத்தில் முருகேசனை தடியால் அடித்து கொலை செய்த பெரியசாமிக்கு என்ன தண்டனை கிடைக்கும் பொதுவாகவே தமிழகத்தில் இந்த இரண்டு திராவிட கட்சிகள் ஆட்சியில் குற்றம் செய்த போலீஸ் காவலர், அதிகாரிகளுக்கு பணியிடை நீக்கம் வேறு ஒரு ஊருக்குஇடமாற்றம் இவை தான் தண்டனை , இவர்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமான்களால் தண்டனை ஒரு போதும் பெறப்படவில்லை
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-202118:10:31 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN தமிழகத்தில் சாதி அரசியலை அறிமுகப்படுத்தியதே திமுக என்னும் விஷ விருச்சம்தான்
Rate this:
Krish - Bengalooru,இந்தியா
28-ஜூன்-202115:47:15 IST Report Abuse
Krishஇதனை வருடங்கள் , நாட்கள் 'பார்ப்பனர்களை ' வந்தேறிகள் என்று நம்மை நம்புபடி செய்தார்கள் . ஆனால் இப்போதுதான் புரிகிறது உண்மையான வந்தேறிகள் திராவிச குஞ்சுகள்தான் ,ஏன் என்றால் பச்சைத்தமிழனான காமராசரை இந்த வந்தேறிகள் தோற்கடித்தனர் , மற்றும் வீட்டில் அவர்கல் பேசுவது தமிழ் அல்ல . இப்போது மற்றும் ஒரு பச்சைத்தமிழராண எடப்பாடியை ஆட்சியில் இருந்து வீழ்த்த கருப்பு துண்டு வீரர் அவர்களுடன் சேர்ந்தார்...
Rate this:
Cancel
27-ஜூன்-202116:30:48 IST Report Abuse
மனுநீதி எல்லாமே திமுக மக்களை ஏமாற்றப் போட்ட நரித் தந்திர நாடகம் தான். இப்போது விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்களுக்கு கண்ணும் தெரியாது, காதும் கேட்காது. அதிலும் சூரியா, விஜய், விஜய் சேதுபதி, சத்தியராஜ் மற்றும் சித்தார்த் போன்றவர்கள் இப்போது இருக்கும் மூலை கூட தெரியவில்லை.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
27-ஜூன்-202121:56:03 IST Report Abuse
madhavan rajanஅவரவர்களுக்கு உரிய பங்கு போய்விட்டால் பங்குத் தந்தை என்ன செய்தாலும் அமைதியாக இருப்பார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X