பொது செய்தி

தமிழ்நாடு

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிதி உதவி கானல் நீராகிறது: நிவாரணத்திற்கு தடை போடும் நிபந்தனையால் அவதி

Updated : ஜூன் 28, 2021 | Added : ஜூன் 26, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
கொரோனா நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித்தொகை அறிவிப்பு, கானல் நீராகிறது. அரசு விதித்துள்ள நிபந்தனைகள் காரணமாக, பெரும்பாலான குழந்தைகள் நிவாரணம் பெற முடியாமல்அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா இரண்டாம் அலை, தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல குழந்தைகள், கொரோனாவுக்கு பெற்றோரை பலி கொடுத்து, ஆதரவின்றி தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பெற்றோர், குழந்தைகள், நிதி உதவி, கானல் நீர், நிவாரணம்,

கொரோனா நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித்தொகை அறிவிப்பு, கானல் நீராகிறது. அரசு விதித்துள்ள நிபந்தனைகள் காரணமாக, பெரும்பாலான குழந்தைகள் நிவாரணம் பெற முடியாமல்அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை, தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல குழந்தைகள், கொரோனாவுக்கு பெற்றோரை பலி கொடுத்து, ஆதரவின்றி தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இவர்களுக்கு உதவ முதல்வர் ஸ்டாலின், மே 29ம் தேதி நிவாரண அறிவிப்புகளை வெளியிட்டார்.
* கொரோனா நோய் தொற்றால், பெற்றோரை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் 'டிபாசிட்' செய்யப்படும்; அந்த குழந்தை, 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை, வட்டியோடு வழங்கப்படும்

* இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரை, கல்வி கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட, அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும்

* தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும், தந்தை அல்லது தாய்க்கு, உடனடி நிவாரணத் தொகை 3லட்சம் ரூபாய் வழங்கப்படும்

* அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாமல், உறவினர் அல்லது பாதுகாவலர் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக, மாதந்தோறும் தலா 3,000 ரூபாய் உதவித்தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும் என, முதல்வர்அறிவித்திருந்தார்.

இச்சலுகைகளை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, 11ம் தேதி சமூக நலத்துறை வெளியிட்டது. அதிலுள்ள சில விதிமுறைகள், பெரும்பாலான குழந்தைகள் நிவாரணம் பெற முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளன.
*அரசு விதிமுறைகளின்படி, பெற்றோர் இருவர் அல்லது ஒருவரை இழந்த குழந்தைகள், அரசு நிவாரணம் பெற, அவர்களின் வயது 18க்குள் இருக்க வேண்டும்

* கல்லுாரி முதலாம் ஆண்டு அல்லது இரண்டாம் ஆண்டு படிக்கும் பிள்ளைகள், பெற்றோரை இழந்தால், அரசு உதவி பெற முடியாது. பெற்றோர் இல்லாமல், அரசு உதவி இல்லாமல், அவர்களால் எப்படி கல்வியை தொடர முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது

* பெற்றோர் இருவரை இழந்த குழந்தைகளுக்கு, வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. ஆனால், தந்தை அல்லது தாயை இழந்த குழந்தைகள், முதல்வர் அறிவித்த நிவாரண உதவியை பெற வேண்டும் என்றால், அந்த குழந்தைகளின் குடும்பம், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டி யலில் இடம் பெற்றிருக்க வேண்டும்

* பட்டியலில் இல்லை என்றால், அவர்கள் பட்டியலில் இடம் பெற தகுதியானவர்களா என ஆய்வு செய்து, அவர்களை பட்டியலில் சேர்க்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

* குழந்தையின் பெற்றோரில் ஒருவர் இருந்து, இறந்தவர் அரசு அல்லது அரசு சார் நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தால், இந்த திட்டத்தில் உதவி பெற முடியாது.

இந்த விதிமுறைகள் காரணமாக, பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளால் பயன் பெற முடியாத நிலை உள்ளது.எனவே, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி, பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் உதவ, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, கொரோனாவால் குடும்பத்தினரை இழந்தவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
27-ஜூன்-202119:56:16 IST Report Abuse
Pugazh V கதறல்களும் புலம்பல்களும் சிறப்பு. ஆனா பத்தாது...இன்னும்.. இன்னும்...
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
27-ஜூன்-202119:54:44 IST Report Abuse
Mohan பெட்ரோல் 150 ரூபாய்க்கு வரும்போது 5 ரூபாய் குறைப்பார்கள் .
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
27-ஜூன்-202112:17:12 IST Report Abuse
S. Narayanan நீங்கள் லஞ்சம் கொடுக்க தயாரா. உங்களுக்கும் உடனே நிவாரணம் உண்டு. ஏற்கனவே நிதி பற்றா குறை. ஓட்டுக்காக நாங்கள் சொன்ன அறிவிப்பை எல்லாம் செய்ய முடியாது. சொன்னதை செய்வோம் என்பதை இப்போது மாற்றிக் கொண்டு விட்டார்கள்.
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
27-ஜூன்-202120:13:11 IST Report Abuse
Loganathaiyyanஇது தான் உண்மையான அர்த்தம் திராவிஷ ஆட்சியின் லட்சணம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X