பொது செய்தி

இந்தியா

வாழ்வாதாரம் இழந்த வழக்கறிஞர்களுக்கு உதவ வேண்டும்: மத்திய அரசிடம் தலைமை நீதிபதி கோரிக்கை

Updated : ஜூன் 26, 2021 | Added : ஜூன் 26, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புது டில்லி: கொரோனா சூழலால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர், அவர்களுக்கு உதவ ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கடிதம் எழுதியுள்ளார்.முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரனின் நூல் வெளியீட்டு விழாவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா

புது டில்லி: கொரோனா சூழலால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர், அவர்களுக்கு உதவ ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கடிதம் எழுதியுள்ளார்.



latest tamil news




முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரனின் நூல் வெளியீட்டு விழாவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: கிராமப்புறங்கள், தொலைத்தூரப் பகுதிகள், மலைப் பகுதிகளில் உள்ள மோசமான இணைய இணைப்பு நீதி வழங்கலின் வேகத்தை கடுமையாக பாதிக்கிறது. மேலும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இளம் வழக்கறிஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். டிஜிட்டல் இடைவெளி காரணமாக அனைத்து தலைமுறை வழக்கறிஞர்களும் அமைப்பிலிருந்து வெளியே தள்ளப்பட்டிருக்கிறார்கள்.


latest tamil news




இப்பிரச்னைகள் சுட்டிக்காட்டி சட்டம் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன். டிஜிட்டல் இடைவெளியை குறைப்பது மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த வழக்கறிஞர்களுக்கு உதவ ஒரு வழிமுறையை உருவாக்குவது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தந்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டிருக்கிறேன். சட்ட தொழில் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். அவர்கள் அனைவருக்கும் முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
27-ஜூன்-202115:42:01 IST Report Abuse
R.RAMACHANDRAN வழக்கறிஞ்சர்கள், நீதி மன்றங்கள் சாமான்ய மக்களுக்கு சேவை எதுவும் செய்யவில்லை..நீதிபதிகளை வழக்கறிஞ்சர்கள் காப்பாற்றுவதும் வழக்கறிஞ்சர்களை நீதிபதிகள் காப்பாறுவதுமாகவே இருக்கிறது இந்த நாட்டின் நீதி நிர்வாகம்.அப்படி இருக்கையில் இவர்களையெல்லாம் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்பது அவர்களின் தற்போதைய நிலையை அங்கீகரிப்பதாகும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
27-ஜூன்-202113:49:24 IST Report Abuse
RajanRajan எத்தனை வக்கீல்கள் நீதி நியாயம் தர்மத்திக்கென்று போராடி இருக்கிறார்கள் எனும் பட்டியலை பார் கவுன்சில் வெளியிடுமா. சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ....என சந்திரபாபு பாடிய பாட்டை தான் நினைத்து பார்க்க வேண்டியுள்ளது சாமியோவ்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
27-ஜூன்-202113:42:52 IST Report Abuse
RajanRajan இந்த தேசத்தில் எந்த வக்கிலுமே வறுமை கோட்டிற்கு கீழ் இல்லை. எனவே இங்கு இவர்களின் வாழ்வாதாரம் குறித்த பேச்சுக்கே இடமில்லை. குரானா பாதிப்பால் பாதுகாக்க பட வேண்டியாது அரசு கஜானா மட்டுமே. அங்கே ஓட்டை விழுந்தால் நாம் சந்திக்க போவது குரானாவை விட பன்மடங்கு பிரச்சினைகளாகும் என்பதே எல்லோராலும் உணரப்பட வேண்டியது சாமிகளா. மொத்தத்தில் மக்களின் வாழ்க்கை தரம் மாறும் சூழல் உருவாக்கி கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X