சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

காத்திருந்து காத்திருந்து...!

Updated : ஜூன் 28, 2021 | Added : ஜூன் 27, 2021
Share
Advertisement
'இந்த முறை எப்படியும் நம் தலைவருக்கு அமைச்சர் பதவி கிடைத்து விடும்' என, மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகின்றனர் பா.ஜ., லோக்சபா எம்.பி., யான வருணின் ஆதரவாளர்கள். இவர், முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, மறைந்த இந்திராவின் பேரன். இவரது தாய் மேனகா, பா.ஜ., வின் மூத்த தலைவர்களில் ஒருவர்.சோனியா குடும்பத்துக்கும், மேனகாவுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால், காங்கிரசை
 அக்கம் பக்கம்

'இந்த முறை எப்படியும் நம் தலைவருக்கு அமைச்சர் பதவி கிடைத்து விடும்' என, மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகின்றனர் பா.ஜ., லோக்சபா எம்.பி., யான வருணின் ஆதரவாளர்கள். இவர், முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, மறைந்த இந்திராவின் பேரன். இவரது தாய் மேனகா, பா.ஜ., வின் மூத்த தலைவர்களில் ஒருவர்.சோனியா குடும்பத்துக்கும், மேனகாவுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால், காங்கிரசை எதிரியாக கருதி, பா.ஜ., வில் இணைந்தார் அவர்.

மோடி தலைமையிலான முந்தைய அரசில் மேனகா அமைச்சராக இருந்தார்; இரண்டாவது முறை, அவருக்கு பதவி கிடைக்கவில்லை. இவரது மகன் வருணும், எம்.பி.,யாக இருப்பதால், அவருக்கு அமைச்சர் பதவி தரப்படவுள்ளதாக பேச்சு எழுந்தது.அமைச்சர் பதவியை எதிர்பார்த்து, இரண்டு ஆண்டுகளாக வருண் காத்திருந்தது தான் மிச்சம். எதுவும் நடக்கவில்லை. வருணுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் அவரது ஆதரவாளர்கள் கவலையில் உள்ளனர்.

இன்னும் சில நாட்களில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. சோர்ந்து போயிருந்த ஆதரவாளர்கள் இதனால் உற்சாகம் அடைந்துள்ளனர். 'கேபினெட் அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும், இணை அமைச்சர் பதவியாவது கிடைக்கும்' என்கின்றனர் அவர்கள். காங்கிரஸ் கட்சியினரோ, 'காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போனது தான் மிச்சம். இந்த முறையும் வருணுக்கு, 'அல்வா' தான்' என, கிண்டலடிக்கின்றனர்.


ஏன் இப்படி நடக்கிறது?


'யாருக்கு, எப்போது பதவி பறிபோகும் என தெரியவில்லையே' என, கலக்கத்தில் உள்ளனர், மேற்கு வங்க மாநில பா.ஜ., நிர்வாகிகள்.

இங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து விடலாம் என மலை போல் நம்பியது பா.ஜ., மேலிடம். மேற்கு வங்கத்தில் உள்ள பா.ஜ., நிர்வாகிகளும், 'மம்தா டம்மி பீஸ். இந்த முறை நமக்குத் தான் வெற்றி' என, டில்லி தலைவர்களை உசுப்பேற்றினர். ஆனால், மம்தா மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து விட்டார். இதையடுத்து தங்களுக்கு உண்மை நிலவரங்களை கூறாமல், 'பில்டப்' கொடுத்த உள்ளூர் நிர்வாகிகளை சுளுக்கெடுக்க தயாராகி வருகிறது பா.ஜ., மேலிடம்.

இதையறிந்ததால் தானோ என்னவோ, தேர்தல் முடிந்ததுமே முகுல் ராய், மீண்டும் திரிணமுல் கட்சிக்கு ஓடினார். இப்போது பா.ஜ., மேலிடத்தின் கவனம் முழுதும், மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவர் திலீப் கோஷ் நோக்கி திரும்பியுள்ளது. விரைவிலேயே அவரை டில்லிக்கு அழைத்து, பதவியை பறிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக மேற்கு வங்கத்தில் தகவல் உலா வருகிறது. இதனால் அரண்டு போயுள்ளார் திலீப் கோஷ்.

தொலைபேசி மணி அடித்தாலே பீதியாகிறார். குளிர் ஜுரம் வந்தது போல் நடுங்குகிறார். 'நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன். எனக்கு ஏன் இப்படி நடக்கிறது...' என, பீதியில் பிதற்றுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X