ரேஷன் கார்டு இணையதளம் பராமரிப்புக்காக நிறுத்தம்

Added : ஜூன் 27, 2021 | |
Advertisement
சென்னை--ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் பொது வினியோக திட்ட இணையதள சேவை, பராமரிப்புக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். அதற்கு, உணவு வழங்கல் துறையின் www.tnpds.gov.in என்ற, பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.தற்போது, ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதிக நிவாரண உதவிகள்

சென்னை--ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் பொது வினியோக திட்ட இணையதள சேவை, பராமரிப்புக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். அதற்கு, உணவு வழங்கல் துறையின் www.tnpds.gov.in என்ற, பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தற்போது, ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதிக நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. இதனால், பலரும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருவதால், பொது வினியோக திட்ட இணையதளம், எப்போதும் இல்லாத வகையில் 'பிசி'யாக உள்ளது.இதையடுத்து, தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில் பராமரிப்பு பணிக்காக, பொது வினியோக திட்ட இணையதள சேவை, நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X