பொது செய்தி

இந்தியா

வழக்கை சந்திக்க தயார் வி.எச்.பி., அறைகூவல்

Updated : ஜூன் 27, 2021 | Added : ஜூன் 27, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி-'நில முறைகேடு தொடர்பாக ராமர் கோவில் அறக்கட்டளை மீது புகார் தெரிவிப்போரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்' என, வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துஉள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை ராமஜென்ம பூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.இந்த

புதுடில்லி-'நில முறைகேடு தொடர்பாக ராமர் கோவில் அறக்கட்டளை மீது புகார் தெரிவிப்போரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்' என, வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துஉள்ளது.latest tamil news


உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை ராமஜென்ம பூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.இந்த அறக்கட்டளையின் சார்பில் அதன் பொதுச் செயலர் சம்பத் ராய், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 18 கோடி ரூபாய்க்கு வாங்கி ஊழல் புரிந்துள்ளதாக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சம்பத் ராய், நிலத்திற்கு சந்தை விலையை விட குறைவாகவே கொடுத்ததாக கூறியுள்ளார். இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் கூறியதாவது:ராமர் கோவிலுக்கு நிலம் கையகப்படுத்தியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அனைத்தும் வெளிப்படையாக, நேர்மையாக நடந்துள்ளது.


latest tamil news


இதில் ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டும் எதிர்கட்சிகள், ஆதாரமில்லாத காரணத்தால் நீதிமன்றத்தை அணுகாமல் உள்ளன. எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் வழக்கு தொடுத்தால், அதை சந்திக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
27-ஜூன்-202118:30:25 IST Report Abuse
Rajas /////எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் வழக்கு தொடுத்தால், அதை சந்திக்க தயாராக உள்ளோம்///// ஆம் ஆத்மீயும் சமாஜ்வாடி தலைவர்களும் இதில் சிபிஐ மற்றும் ED விசாரணையை கேட்டார்கள். அதை பற்றி VHP எதுவும் பேசவில்லை.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
27-ஜூன்-202122:29:04 IST Report Abuse
madhavan rajanஅதற்கும் ஆதாரமிருந்தால் வழக்கு தொடரலாம். எதற்காக செய்யவில்லை....
Rate this:
Cancel
Kumar TT -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூன்-202115:43:43 IST Report Abuse
Kumar TT யார் கண்டது கோவில் கட்டுவதை தடுக்க இப்படி ஒரு முறைகேடு நாடகமாடினால் கோவில் கட்டுமானம் தள்ளி போகலாம் என்ற எண்ணமாக இருக்கலாம்
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூன்-202115:03:57 IST Report Abuse
Sriram V All these parties are against Hindus hence wants to stop the construction of temple hence trying to find out issues
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X