பொது செய்தி

தமிழ்நாடு

பிரபாகரனின் மொத்த ஏஜன்டா சீமான்? 'மேதகு' படத்தால் சர்ச்சை

Added : ஜூன் 27, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை போற்றும் வகையில், ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, 'மேதகு' என்ற படத்தை எடுத்துள்ளனர். அது, பல தடங்கல்களை சந்தித்து, 25ம் தேதி ஓ.டி.டி., வாயிலாக வெளியாகியுள்ளது.இந்தப் படம் தொடர்பாக, தமிழ் ஆதரவாளர் ஒருவரிடம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். அந்த மொபைல் போன் உரையாடல் பதிவு, சமூக
seeman, prakhakaran, சீமான், பிரபாகரன், நாம் தமிழர், LTTE,

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை போற்றும் வகையில், ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, 'மேதகு' என்ற படத்தை எடுத்துள்ளனர். அது, பல தடங்கல்களை சந்தித்து, 25ம் தேதி ஓ.டி.டி., வாயிலாக வெளியாகியுள்ளது.

இந்தப் படம் தொடர்பாக, தமிழ் ஆதரவாளர் ஒருவரிடம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். அந்த மொபைல் போன் உரையாடல் பதிவு, சமூக வலைதளங்களிலும், 'வாட்ஸ் ஆப்'பிலும் வெளியாகியுள்ளது.


latest tamil news
'தலைவர் பிரபாகரன் குறித்து, மேதகு படம், இங்கிருந்து போன சிலரால் எடுக்கப்படுகிறது. அது வெளியானால், பல சங்கடங்களை ஏற்படுத்தும். அதனால், அதை துவக்கத்திலேயே தடுத்து விட வேண்டும்.'இதை நாம் நேரடியாக செய்தது போல இருக்கக்கூடாது. இப்படியே விட்டால், அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கும்' என்ற ரீதியில் அந்த உரையாடல் அமைந்திருக்கிறது.

அந்த உரையாடலில், 'இங்கிருந்து போனவர்கள்' என, தற்போது அ.தி.மு.க.,வின் விவாத பங்கேற்பாளராக உள்ள கல்யாண சுந்தரம் உள்ளிட்ட சிலரின் பெயர்களை, சீமான் குறிப்பிடுகிறார்.

இதிலென்ன அரசியல் என விசாரித்த போது, கிடைத்த தகவல்கள் வருமாறு:ஈழம் தொடர்பாக எதுவாக இருந்தாலும், அதில் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என, சீமான் நினைக்கிறார். குறிப்பாக, பிரபாகரன் என்றாலே, சிறிது கூட விட்டுக் கொடுக்க மாட்டார்.மேதகு படத்தை எடுக்க உறுதுணையாக இருந்தது, சீமானோடு இணைந்து பணியாற்றியவர்கள். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, தற்போது பல்வேறு இயக்கங்களில் இணைந்துள்ளனர். அவர்கள், மேதகு படம் எடுப்பது சீமானுக்குப் பிடிக்கவில்லை.இந்தப் படம் வெளியானால், பிரபாகரனோடு தனக்கு நெருக்கம் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் செய்திகளுக்கு, முக்கியத்துவம் இல்லாமல் போகும் என்றும் நினைத்தார்.அதுகுறித்து கட்சிக்காரர் ஒருவரிடம் சீமான் பேசியுள்ளார். அந்த உரையாடல் தான் பதிவெடுக்கப்பட்டு, வெளியாகி இருக்கிறது. இவ்வாறு தகவல்கள் கிடைத்தன.


இதுகுறித்து, சீமானின் கருத்தறிய, அவரது உதவியாளர் செந்திலை தொடர்பு கொண்ட போது அவர் கூறியதாவது:
மேதகு படம் நல்லவிதமாக வெளியாகி உள்ளது. அந்தப் படத்தை, தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என, சீமான் கூறி விட்டார். இனி படம் தொடர்பாக, வேறு எதுவும் அவர் பேச விரும்பவில்லை. சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவுக்கும், சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை.இவ்வாறு செந்தில் கூறினார்.சீமானுக்கு ஏற்பட்டது தோல்வி!அ.தி.மு.க., ஊடக விவாத பங்கேற்பாளர் கல்யாணசுந்தரம் கூறியதாவது:
நாம் தமிழர் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பலரும், மேதகு படத்தில் இணைந்து பணியாற்றியது சீமானுக்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, பிரபாகரன் பற்றி நிறைய பொய் தகவல்களை அவர் கூறியுள்ளார். மேதகு படம் வெளியானால், தன் சாயம் வெளுத்து விடும் என்ற பதற்றத்தில், பல காரியங்களை செய்தார். படத்தை வெளிவராமல் செய்ய, அவர் முடிந்த மட்டும் முயற்சித்தார்; தோற்று விட்டார். படம் வெளியாகி வெற்றி பெற்று விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

-- நமது நிருபர் - -

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
28-ஜூன்-202105:35:26 IST Report Abuse
meenakshisundaram அண்ணா .அண்ணா -என்று முக ஏமாற்றினார் .சீமான் 'பிரபாகரனை காட்டி ஏமாற்றுகிறார் என்பதே உண்மை.அது சரி இதிலே வைகோ எங்கே ?
Rate this:
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
29-ஜூன்-202118:51:36 IST Report Abuse
Naam thamilarஏழை தாயின் மகன் என்று மோடி ஏமாற்றுகிறார்....
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
28-ஜூன்-202102:47:58 IST Report Abuse
அன்பு பிரபாகரனின் முதல் எதிரியே சீமான் தான். ராஜபக்சே அப்புறம் தான். பிரபாகரனை வைத்து பணம் சம்பாரித்தவர்களில் முதன்மையானவர் அண்ணன் சீமான் தான். பிரபாகரனை கேட்டால், கருணா தான் துரோகி என்று நினைத்தேன். அவர் கூட எனது பெயரை வைத்து வயிற்றை கழுவவில்லை. சீமான் தான் எனது முதல் எதிரி என்று வானுலுகில் இருந்து சொல்வார். சீமான் சிறந்த டைரக்டர் என்பதை அவர் பிரபாகரனை வைத்து சொல்லும் கதைகளில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். அதிலும் உண்மை என்று சொல்லியே, அவரது தம்பிகளை நம்பவைத்து, சொகுசுவாழ்க்கை வாழ்ந்துவருகிறார். கதை கேட்ட அசட்டு தம்பிகளும், பிரபாகரனை விட சிறந்த போராளி சீமான் என்று நம்பிவருகிறார்கள்.
Rate this:
Cancel
Rajah - Colombo,இலங்கை
27-ஜூன்-202119:35:35 IST Report Abuse
Rajah காசு கொடுத்து குத்து மாடு வாங்கிய பின்னர் பிரபாகரனைப்பற்றி குறை கூற யாருக்கும் தகுதி இல்லை. மாடு குத்தியிருந்தால் மாடு வாங்கியவரே அதற்குப் பொறுப்பாளி. சீமான் என்றால் யார் என்றே இங்குள்ள பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரியாது. ஒரு சினிமா எடுப்பதற்காகவே சீமான் இங்கு வரவழைக்கப்படடார் என்று முன்னாள் புலிகள் இயக்கத்தின் பெண் பிரமுகர் ஒருவர் அண்மையில் கூறியிருந்தார். முதலில் வைகோவையும் சீமானையும் ஒரே மேடையில் இலங்கைத் தமிழர்கள் பற்றி பேசச் சொல்லுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X