பொது செய்தி

தமிழ்நாடு

பெற்றோரை இழந்த சிறுவன் பாட்டியுடன் பரிதவிப்பு

Added : ஜூன் 27, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
தஞ்சாவூர்: தாய், தந்தையை இழந்த, 15 வயது சிறுவன் பாட்டியுடன் வருமானமின்றி தவித்து வருகிறான்.தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே களத்துார் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன், தச்சு தொழிலாளி. மனைவி ராஜேஸ்வரி. மகன் சபரிநாதன், 15. அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு முடித்துள்ளார்.சபரிநாதனுக்கு, 2 வயதாக இருந்த போது, தாய் ராஜேஸ்வரி இறந்துவிட்டார். தந்தை நீலகண்டன், பாட்டி லெட்சுமி, 70
 பெற்றோரை இழந்த சிறுவன் பாட்டியுடன் பரிதவிப்பு

தஞ்சாவூர்: தாய், தந்தையை இழந்த, 15 வயது சிறுவன் பாட்டியுடன் வருமானமின்றி தவித்து வருகிறான்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே களத்துார் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன், தச்சு தொழிலாளி. மனைவி ராஜேஸ்வரி. மகன் சபரிநாதன், 15. அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு முடித்துள்ளார்.சபரிநாதனுக்கு, 2 வயதாக இருந்த போது, தாய் ராஜேஸ்வரி இறந்துவிட்டார். தந்தை நீலகண்டன், பாட்டி லெட்சுமி, 70 அரவணைப்பில் வளர்ந்தான்.

இந்நிலையில் காய்ச்சல்ஏற்பட்ட நீலகண்டன் கடந்த, 23ம் தேதி உயிரிழந்தார். பெற்றோரை இழந்த சபரிநாதன், பாட்டியின் அரவணைப்பில் உள்ளார்.தற்போது கொரோனா ஊரடங்கால் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு கூட பணமில்லாமல் சபரிநாதன், பாட்டி சிரமப்பட்டு வருகின்றனர்.அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகண்டனின் நண்பர் கார்த்தி கூறியதாவது:அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில், கொரோனா ஊரடங்கு காலத்தில், உணவின்றி தவிக்கும் பலருக்கும் சாப்பாடு கொடுத்து வந்தோம். நீலகண்டன், ஏழ்மையிலும், யாரும் பட்டினியாக இருக்கக் கூடாது, என கூறி தினமும் சாப்பாடு கொடுக்க வந்து விடுவார்.அவரது மகன், வயதான அவருடைய தாய் ஆகியேரின் எதிர்காலம் கேள்வியாக உள்ளது. ஆளும், எதிர்கட்சியினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உதவவேண்டும். இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seenivasan - singapore,சிங்கப்பூர்
27-ஜூன்-202109:40:23 IST Report Abuse
seenivasan அவர்களுடைய மொபைல் நம்பர் பகிரவும்
Rate this:
27-ஜூன்-202111:16:40 IST Report Abuse
sundara rajan7639315282 - சபரிநாதன்...
Rate this:
Arul. K - Hougang,சிங்கப்பூர்
29-ஜூன்-202108:22:07 IST Report Abuse
Arul. Kநான் விரைவில் திரு சபரிநாதன் அவர்களை தொடர்பு கொள்கிறேன். ஒரு மாதத்துக்கான மளிகைப்பொருளுக்கு ஏற்பாடு செய்கிறேன்....
Rate this:
குசும்புகாரன் - Tamildadu,இந்தியா
30-ஜூன்-202116:32:27 IST Report Abuse
குசும்புகாரன்மிக்க நன்றி அருள்...
Rate this:
Arul. K - Hougang,சிங்கப்பூர்
01-ஜூலை-202110:47:40 IST Report Abuse
Arul. Kசபரிநாதனிடம் ஸ்மார்ட் போன் மற்றும் வாட்ஸாப்ப் இல்லையாம். யாராவது அவரது பாட்டியின் வாங்கி கணக்கு விவரத்தை எனக்கு அனுப்புவதற்கு உதவி செய்யுங்கள். எனது கையடக்க தொலைபேசி அவருக்கு தெரியும் +ஆறு ஐந்து 2500...
Rate this:
seenivasan - singapore,சிங்கப்பூர்
05-ஜூலை-202120:10:38 IST Report Abuse
seenivasanஇவர்களிடம் தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கு பெற முடிந்ததா? நன்றி...
Rate this:
Arul. K - Hougang,சிங்கப்பூர்
06-ஜூலை-202112:48:56 IST Report Abuse
Arul. Kஆம் வங்கி கணக்கு பெறமுடிந்தது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X