அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.62 கோடி 'கான்ட்ராக்ட்' அள்ளிய 'மாஜி' குடும்பம்

Updated : ஜூன் 27, 2021 | Added : ஜூன் 27, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
திருச்சி:புதுக்கோட்டை கிராமப்புறங்களுக்கு சாலை அமைக்க, 62 கோடி ரூபாய்க்கான கான்ட்ராக்ட், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமப் புறங்களுக்கு சாலை அமைக்க, ஊரக வளர்ச்சித்துறை மூலம், 62 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டர் பிப்., 25ம் தேதி, அதாவது, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முதல்

திருச்சி:புதுக்கோட்டை கிராமப்புறங்களுக்கு சாலை அமைக்க, 62 கோடி ரூபாய்க்கான கான்ட்ராக்ட், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமப் புறங்களுக்கு சாலை அமைக்க, ஊரக வளர்ச்சித்துறை மூலம், 62 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டர் பிப்., 25ம் தேதி, அதாவது, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முதல் நாள், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர் பெயரில் இறுதி செய்யப்பட்டது.



latest tamil news



தேர்தல் பணிகள் துவங்கியதால், வேலைகள் துவக்கப்படவில்லை. இந்நிலையில் ஆட்சி மாறியதும், விஜயபாஸ்கர் குடும்பத்தினருக்கு, 62 கோடி ரூபாய் கான்ட்ராக்ட் ஒதுக்கப்பட்டது குறித்து, புதுக்கோட்டை மாவட்ட அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதனுக்கு தெரியவந்தது.

அவர்கள் ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட திட்ட இயக்குனரை அழைத்து, 'அந்த டெண்டர் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது' என, அறிவுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன், 62 கோடி ரூபாய்க்கான டெண்டருக்கு, விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி மற்றும் உறவினர் ஒருவரது பெயரில் பணி ஆணை - ஒர்க் ஆர்டர் - கொடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news



முன்பு கலெக்டராக இருந்த உமா மகேஸ்வரி, தன் டிரான்ஸ்பருக்கு முன் இந்த ஆர்டருக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால், மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளும், தி.மு.க., ஆதரவு கான்ட்ராக்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:கடந்த ஆட்சியில் தி.மு.க.,வினரை தலைதுாக்க விடாமல் செய்தவர் விஜயபாஸ்கர். அவரால் எந்த பணியும் எங்களால் எடுக்க முடியவில்லை. அவ்வளவு ஏன், தி.மு.க.,வினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு அளிக்க விடாமல் செய்தவர் அவர்.

பிரசாரத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உட்பட அனைவரும் அவரை கடுமையாக தாக்கி பேசினர். அப்படிப்பட்டவருக்கு, தி.மு.க., ஆட்சியிலும், இரு மாவட்ட நிர்வாகிகள் சிபாரிசில், 62 கோடி ரூபாய்க்கான கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், விஜயபாஸ்கர் ஆளுமைக்கு முன், இரு அமைச்சர்களும் தோல்வி அடைந்து விட்டனர். 10 ஆண்டுக்கு பின் தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது, இனியாவது வேலை எடுத்து பிழைப்பு நடத்தலாம் என்றால், அ.தி.மு.க., ஆட்சியில் நடந்ததே, இப்போதும் தொடர்கிறது. இவ்விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RG RG - Chennai,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-202123:27:33 IST Report Abuse
RG RG ரொம்ப ஓப்பனா பேசிட்டிங்கா ஐயா
Rate this:
Cancel
Rajagopal - Chennai,இந்தியா
28-ஜூன்-202121:18:06 IST Report Abuse
Rajagopal தி.மு.க, அ.தி.மு.க கூட்டுக்கொள்ளையில் தமிழ் நாடு டர்ர்ர்ர்...
Rate this:
Cancel
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
28-ஜூன்-202114:10:06 IST Report Abuse
Nallappan Kannan Nallappan Sampath Kumar - Chennai,இந்தியா நீ தான் போராடவேண்டும் உன்னோட ஆச்சி இல்ல இது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X