அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசுக்கு வருவாய் ஈட்ட அமைச்சர் உத்தரவு

Updated : ஜூன் 29, 2021 | Added : ஜூன் 27, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை:அரசுக்கு வருவாய் ஈட்டி தரும்படி, நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதால், புதிய குவாரிகளை அடையாளம் காணும் முயற்சிகளில், அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.நீர்வளத்துறையின் கீழ் உள்ள, புவியியல் மற்றும் சுரங்கங்கள் கண்காணிப்பு மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளுடன், துறை அமைச்சர் துரைமுருகன், சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.அப்போது, 'அரசு மிகுந்த நிதி
அரசுக்கு வருவாய் ஈட்ட அமைச்சர் உத்தரவு

சென்னை:அரசுக்கு வருவாய் ஈட்டி தரும்படி, நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதால், புதிய குவாரிகளை அடையாளம் காணும் முயற்சிகளில், அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

நீர்வளத்துறையின் கீழ் உள்ள, புவியியல் மற்றும் சுரங்கங்கள் கண்காணிப்பு மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளுடன், துறை அமைச்சர் துரைமுருகன், சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.அப்போது, 'அரசு மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளதால், கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டும். இதற்காக, புதிதாக மணல் குவாரிகளை தேர்வு செய்ய வேண்டும்' என, வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தர்மபுரி, மதுரை, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள தகுதிவாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனடியாக ஏலம் விட வேண்டும். வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள, கறுப்பு கிரானைட் குவாரிகளை திறக்க வேண்டும். மாநிலம் முழுதும் புதிய கனிமவள குவாரிகளை கண்டறிந்து, அவற்றை சுரங்க குத்தகை விடவும், லாபகரமாக சந்தைப்படுத்தவும், அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும். இதன் வாயிலாக, அரசுக்கு வருவாய் ஈட்ட வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

அமைச்சரின் உத்தரவை அடுத்து, மாநிலம் முழுதும் மணல், கிரானைட், மேக்னசைட் உள்ளிட்ட குவாரிகளை அடையாளம் காணும் பணிகளில், புவியியல் மற்றும் சுரங்கங்கள் கண்காணிப்பு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கனிமவள விற்பனையை முறையாக கையாண்டால், டாஸ்மாக் மது விற்பனையை விட அதிகளவில் அரசிற்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே, முந்தைய ஆட்சியை போல இல்லாமல், கனிமவள விற்பனையை முறைப்படுத்த, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
29-ஜூன்-202107:32:01 IST Report Abuse
RajanRajan கழக கண்மணிகளே ஏதாயிருந்தாலும் அத்தனையும் அந்த காட்பாடி கோடௌனிலே கொண்டு வந்து கொட்டவும். ஸ்விஸ் வங்கிக்கு இணையாக மிகவும் பாதுகாப்பான முதலீடு செய்யும் ஒரே இடம் நான் அவனில்லை எனும் அந்த காட்பாடி கோடவுன் மறவாதீர்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
28-ஜூன்-202120:16:57 IST Report Abuse
siriyaar மேலும் பாலியல் கொடுமைகளை குறைக்க கள்ளச்சாராயத்தை தடுக்க எடுத்த டாஸ்மாக் நடவடிக்கை போல் எதாவது வழிமுறையை அரசு செயல்படுத்தினால் அரசின் வருமானம் இரட்டிப்பு ஆகும், வைரமுத்துக்கள் வைரங்களை அரசுக்கு கொட்டுவார்கள்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
28-ஜூன்-202118:44:22 IST Report Abuse
g.s,rajan வருமானமே அதுதான் உங்க கட்சி .ஆட்கள் கிட்டயே நிறைய கொட்டிக்கிடக்கே ,அதை நீங்களே வசூல் செய்யலாம் ,ஒன்றும் தவறில்லை. ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X