கொரோனா தடுப்பூசி மட்டுமே அடுத்த அலைகளை தடுக்கும்| Dinamalar

'கொரோனா தடுப்பூசி மட்டுமே அடுத்த அலைகளை தடுக்கும்'

Updated : ஜூன் 29, 2021 | Added : ஜூன் 27, 2021 | |
புதுடில்லி:''கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளால் மட்டுமே அடுத்த அலைகள் உருவாவதை, பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்க முடியும்,'' என, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பணிக் குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறியுள்ளார்.'டெல்டா பிளஸ்' எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு பல மாநிலங்களில் துவங்கியுள்ளது. இது குறித்து டாக்டர் என்.கே.அரோரா
 'கொரோனா,தடுப்பூசி, அடுத்த அலை, தடுக்கும்'

புதுடில்லி:''கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளால் மட்டுமே அடுத்த அலைகள் உருவாவதை, பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்க முடியும்,'' என, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பணிக் குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறியுள்ளார்.

'டெல்டா பிளஸ்' எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு பல மாநிலங்களில் துவங்கியுள்ளது. இது குறித்து டாக்டர் என்.கே.அரோரா கூறிஉள்ளதாவது:டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ், நுரையீரலில் உள்ள சில திசுக்களில் அதிகம் காணப்படுகிறது. அதனால், இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும், வேகமாக பரவும் என கூற முடியாது.



இந்த புதிய வகை வைரஸ் பரவல் அதிகமாகும் போது தான், அதன் தாக்கம் குறித்து தெரிய வரும். அதே நேரத்தில் தடுப்பூசி போட்டவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது.ஏற்கனவே இரண்டு அலைகளை சந்தித்துவிட்டோம். அந்த அனுபவத்தில் மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ளும்.இரண்டாவது அலை ஓய்ந்துவிட்டதாக கூற முடியாது.



கடந்த 10 நாட்களாக, ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரமாக நிலையாக உள்ளது. தற்போதுள்ள நிலையில் தடுப்பூசி வழங்குவதை அதிகப்படுத்த வேண்டும். அடுத்த அலைகள் உருவாவதை தடுப்பதுடன், பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கவும் இது ஒன்றே வாய்ப்பு.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.கழிவில் வைரஸ்கள்!ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:



உலகெங்கும், 24 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு செய்யப் பட்டது. அதில், மனிதன் வெளிப்படுத்தும் மலத்தில் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வைரஸ்கள் இருப்பது தெரியவந்துள்ளது.இதில் 92 சதவீதம் குறித்து இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை. இந்த வைரஸ்கள், நம் உடலை தாக்கக் கூடிய பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியவை. ஆனால் மனிதனுக்கு எந்த பாதிப்பையும் இந்த வைரஸ்கள் ஏற்படுத்துவதில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X