அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிதாக 27 பேருக்கு வாய்ப்பு?

Updated : ஜூன் 29, 2021 | Added : ஜூன் 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி:'மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம்' என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா, சுஷில் மோடி, நாராயண் ரானே, பூபேந்தர் யாதவ் உட்பட, புதிய அமைச்சர்களாக வாய்ப்புள்ளோர், 27 பேரின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.மத்திய அமைச்சர்கள், மூத்த எம்.பி.,க்கள் உள்ளிட்டோரை அழைத்து, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா
Modi cabinet, reshuffle, PM Modi, அமைச்சரவை, விரிவாக்கம், 27 பேர்,வாய்ப்பு

புதுடில்லி:'மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம்' என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா, சுஷில் மோடி, நாராயண் ரானே, பூபேந்தர் யாதவ் உட்பட, புதிய அமைச்சர்களாக வாய்ப்புள்ளோர், 27 பேரின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

மத்திய அமைச்சர்கள், மூத்த எம்.பி.,க்கள் உள்ளிட்டோரை அழைத்து, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் சமீபத்தில் இருமுறை ஆலோசனை கூட்டம் நடத்தியதை அடுத்து, மத்திய அமைச்சரவை விஸ்தரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.


உத்தேச பட்டியல்

உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களை சேர்ந்த, கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டிய கடமை பா.ஜ.,வுக்கு இருப்பதால், அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக 27 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக, உத்தேச பட்டியல் ஒன்று உலா வருகிறது.அதில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, பீஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடி, ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ., பொது செயலர் பூபேந்தர் யாதவ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன. மேலும், அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனாவால், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ரானே, மஹாராஷ்டிரா எம்.பி., பிரீத்தம் முண்டே ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.


முக்கியத்துவம்

இந்த அமைச்சரவை விஸ்தரிப்பில், ராஜஸ்தானைச் சேர்ந்த தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கைலாஷ் விஜய வர்கியா பெயரும் இதில் உள்ளது. டில்லியை சேர்ந்த எம்.பி., மீனாட்சி லேகிக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.லோக் ஜன சக்தி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானை எதிர்த்து போர்க்கொடி துாக்கிய, பசுபதி பரசுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
28-ஜூன்-202114:25:34 IST Report Abuse
sahayadhas ஆஹா செலவு குறைப்பது போல் நாடகம் ஆடி எல்லாருக்கும் பதவி என்ற பெயரில் ஜனங்கள் பணம் விரையம்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
28-ஜூன்-202114:19:55 IST Report Abuse
vpurushothaman அப்படியானால் தமிழ்நாட்டுக்கு...............?
Rate this:
28-ஜூன்-202115:16:09 IST Report Abuse
மனுநீதி38 காண்ட்டீன் டோக்கன்கள் தயார்...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
28-ஜூன்-202110:46:20 IST Report Abuse
duruvasar அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு மந்திரி பதவி கொடுத்து தக்கவைத்துக்கொண்ட நம் ராஜதந்திர தலைவர் புகழ் டில்லி சென்றடைந்துள்ளது மகிழ்சியே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X