அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒற்றை தலைமைஉயர் மட்ட செயலர் பதவியில் அமர 'மாஜி' முதல்வர் மும்முரம்

Updated : ஜூன் 28, 2021 | Added : ஜூன் 27, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
அ.தி.மு.க.,வில் இரட்டை தலைமை முறையை மாற்றி விட்டு, ஒற்றை தலைமைக்கு அதிகாரம் வழங்கும் வகையில், விரைவில் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தி ஒப்புதல் பெற பழனிசாமி., அணி திட்டமிட்டுள்ளது. 'உயர்மட்ட செயலர்' என்ற பதவியின் கீழ் அமர்ந்து, கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைக்க, 'மாஜி' முதல்வர் மும்முரம் காட்டி வருகிறார். கட்சியில் கால் பதிக்க முற்படும் சசிகலாவின்
ஒற்றை தலைமை? ,உயர் மட்ட செயலர் ,பதவி,  'மாஜி' முதல்வர் ,மும்முரம்

அ.தி.மு.க.,வில் இரட்டை தலைமை முறையை மாற்றி விட்டு, ஒற்றை தலைமைக்கு அதிகாரம் வழங்கும் வகையில், விரைவில் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தி ஒப்புதல் பெற பழனிசாமி., அணி திட்டமிட்டுள்ளது. 'உயர்மட்ட செயலர்' என்ற பதவியின் கீழ் அமர்ந்து, கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைக்க, 'மாஜி' முதல்வர் மும்முரம் காட்டி வருகிறார். கட்சியில் கால் பதிக்க முற்படும் சசிகலாவின் தந்திரத்தை முறியடிக்கவும், இந்த அதிரடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கால், ஜெயலலிதா முதல்வர் பதவியை துறக்கும் நிலை ஏற்பட்ட போது, அப்பதவியை ஓ.பி.எஸ்.,சுக்கு வழங்கினார். அவரும், ஜெ.,க்கு விசுவாசமாக இருந்தார். அவரை ஜெ.,வின் அரசியல் வாரிசாக, கட்சித் தொண்டர்கள் பார்த்தனர்.அவரிடம் இருந்த முதல்வர் பதவியை, சசிகலா பறிக்க முயன்றதும், அவரை எதிர்த்து தர்ம யுத்தத்தை, பன்னீர்செல்வம் ., துவக்கினார். அப்போது, அ.தி.மு.க., தொண்டர்கள், அவர் பக்கம் நின்றனர்.

அதன்பின், அணிகள் இணைந்த போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் ., நியமிக்கப்பட்டார்; துணை முதல்வராகவும் பதவியேற்றார். அதன்பின், அவருக்கு கட்சியில் இறங்குமுகமாகவே உள்ளது.அணிகள் இணைந்த பின், அனைவரும் நம் கட்சியினர் என்ற நிலைப்பாட்டைபன்னீர்செல்வம் ., எடுத்தார். ஆனால், எதிர் அணியினர் திட்டமிட்டு, அவரது ஆதரவாளர்களை ஓரங்கட்டினர். அதை, பன்னீர்செல்வத்தால் தடுக்க முடியவில்லை; படிப்படியாக தன் ஆதரவாளர்களை இழந்தார்.


புகழேந்தி நீக்கம்

நாளடைவில் பழனிசாமி., தரப்பினர் கை ஓங்கியது. சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், எதிர்க்கட்சி தலைவராக பன்னீர்செல்வம் ., ஆசைப்பட்டார். ஆனால், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் தன் பக்கம் இழுத்த பழனிசாமி., எதிர்க்கட்சி தலைவரானார்.அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் புகழேந்தி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதையும் பன்னீர்செல்வம் ., தடுக்கவில்லை. இது, அவரை நம்பியிருந்தவர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பழனிசாமி., தரப்பு கை ஓங்குவதும், பன்னீர்செல்வம் ., ஓரம் கட்டப்படுவதும், அவரது ஆதரவாளர்களிடமும், கட்சியின் கீழ் மட்ட நிர்வாகிகள், தொண்டர்களிடமும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.


சசிகலாவால் குழப்பம்



இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள சசிகலா முடிவு செய்து, கட்சியினருடன் மொபைல் போன் வழியாக பேச துவங்கி உள்ளார். இதனால், கட்சியில் குழப்பம் ஏற்படும் நிலை உருவானது. சசிகலாவுக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் திரள ஆரம்பித்தால், தங்கள் பதவிக்கு சிக்கல் என்பதை, பழனிசாமி., மற்றும் அவரது ஆதரவாளர்கள் உணர்ந்துள்ளனர்.எனவே, விரைவில் கட்சியை தங்கள் வசம் கொண்டு வர, அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கு முதல் கட்டமாக, இரட்டை தலைமையை மாற்றி, ஒற்றை தலைமையாக, பழனிசாமி., தலைமையின் கீழ், கட்சியை கொண்டு வர முடிவு செய்து, காய் நகர்த்த துவங்கி உள்ளனர்.

இதுகுறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் ., இருந்தாலும், அவருக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார். பிற கட்சிகளில் இருந்து வருவோர், அவர் முன்னிலையில் தான் இணைகின்றனர். சமீபத்தில் சட்டசபை கூட்டத்தில், எம்.எல்.ஏ., அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், இணை ஒருங்கிணைப்பாளர் என, பழனிசாமியை குறிப்பிடாமல், கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்றே, இருவரையும் குறிப்பிட்டார்.

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு குறைந்து விட்டதால், விரைவில் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை கூட்ட, பழனிசாமி., தரப்பு முடிவு செய்துள்ளது. பொதுச்செயலர் பதவி யாருக்கும் இல்லை என, முடிவு செய்திருப்பதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை துாக்கிவிட்டு, உயர்மட்ட செயலர் என்ற பதவியை உருவாக்கி, அதில், பழனிசாமியை அமர வைக்க திட்டமிட்டுள்ளனர்.

பன்னீர்செல்வம் ., விரும்பினால், அவைத் தலைவர் பதவியை வழங்குவது, ஏற்க மறுத்து கட்சியை விட்டு வெளியேறினால், மகிழ்ச்சியாக வெளியில் அனுப்பி வைப்பது என்றும், பழனிசாமி., தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உயர்மட்ட செயலர் கட்டுப்பாட்டில், கட்சியை முழுமையாக கொண்டு வர, தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக சசிகலா காத்திருக்கிறார். பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டினால், தென் மாவட்டம், முக்குலத்தோர் சமுதாயம் புறக்கணிக்கப்படுகிறது எனக்கூறி, கட்சிக்குள் வர திட்டமிடுகிறார். எனவே, கட்சி தலைமை பதவிக்கு விரைவில் குடுமிப்பிடி சண்டை நடப்பது உறுதியாகி உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- -நமது நிருபர் --

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
28-ஜூன்-202123:56:15 IST Report Abuse
Arachi வாழ்வு கொடுத்தவரையே காலை வாரி விட்டவருக்கு பன்னீர்செல்வம் எம்மாத்திரம்.ருசிகண்ட பூனை சும்மா விடுமா குரங்கு மண்டலத்தால் மூச்சு ஊசலாடிகிட்டு இருக்கு. அதுவும் போயிட்டூனா கனவு சுத்தமா நனவாகாது
Rate this:
Cancel
Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா
28-ஜூன்-202121:27:36 IST Report Abuse
Thulasingam Jayaram Pillai அதிமுக அழியக் கூடாது, கேடர்களான பிஜேபி தமிழ்நாட்டில் வளரக் கூடாது, அதற்கு தலைமை ஏற்க பழனிச்சாமி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-ஜூன்-202120:20:22 IST Report Abuse
Pugazh V ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படுதிதியவரை வாங்க வாங்க என்று திமுக காரன் கதறுவானா? .. இதென்ன உ.பி. அல்லது குஜராத் என்று நினைத்தீர்களா? இது தமிழ் நாடு. உள்ளாட்சி தேர்தலில் பார்க்கத் தானே போகிறோம். "வெற்றிக் கூட்டணி தொடரும்" என்று அதிமுக பாஜக இரண்டு ம் சேர்ந்து காமெடி டயலாக் வேற வுடுவார்கள். பாருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X