சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கப்பலேறிய மானம்!

Updated : ஜூன் 28, 2021 | Added : ஜூன் 28, 2021
Share
Advertisement
'விளம்பர அரசு என ஏற்கனவே நம்மை கடுமையாக விமர்சிக்கின்றனர். இந்த நேரத்தில் இவர் வேறு, இப்படி ஒரு காரியத்தைச் செய்துள்ளாரே...' என, தங்கள் கட்சி எம்.எல்.ஏ., ஒருவரைப் பற்றி கடுப்புடன் கூறுகிறார், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.கொரோனா இரண்டாவது அலை துவங்கிய காலத்தில், அதிகம் அலறிய அரசியல்வாதி அரவிந்த் கெஜ்ரிவாலாகத் தான்
அக்கம் பக்கம்

'விளம்பர அரசு என ஏற்கனவே நம்மை கடுமையாக விமர்சிக்கின்றனர். இந்த நேரத்தில் இவர் வேறு, இப்படி ஒரு காரியத்தைச் செய்துள்ளாரே...' என, தங்கள் கட்சி எம்.எல்.ஏ., ஒருவரைப் பற்றி கடுப்புடன் கூறுகிறார், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.

கொரோனா இரண்டாவது அலை துவங்கிய காலத்தில், அதிகம் அலறிய அரசியல்வாதி அரவிந்த் கெஜ்ரிவாலாகத் தான் இருக்கும்.தினமும் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்தித்து விளக்கம் அளித்தார். இதற்கு பின், மத்திய அரசு அளித்த தடுப்பூசி, ஆக்சிஜன், படுக்கை வசதிகள் போன்ற உதவிகளை எல்லாம், தாங்களே செய்ததாக கூறி, விளம்பரம் தேடவும் கெஜ்ரிவால் தவறவில்லை.

இதையடுத்து, 'மாநில அரசின் கஜானாவை சுய விளம்பரத்துக்காக காலி செய்து விட்டார்' என, கெஜ்ரிவால் மீது, பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டினர். இந்த நேரத்தில் தான், டில்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., சிவ்சரண் கோயல், தன் தொகுதிக்கு உட்பட்ட சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத் தடையை திறந்து வைத்து, அதற்காக விழாவையும் நடத்தினார்.

இதைக் கேள்விப்பட்ட டில்லி மக்கள், 'வேகத்தடையை திறந்து வைக்க விழா நடத்திய ஒரே கட்சி, ஆம் ஆத்மி தான்' என, கிண்டலடிக்கின்றனர்.கெஜ்ரிவாலோ, 'மிச்சம் மீதியிருந்த மானம், மரியாதையையும் ஒட்டுமொத்தமாக கப்பலேற்றி விட்டாரே...' என, புலம்புகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X