அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஜெய்ஹிந்த்' விவகாரத்தில் காங்கிரஸ் கோபம்; கவர்னரிடம் மனு கொடுக்க திட்டம்

Updated : ஜூன் 28, 2021 | Added : ஜூன் 28, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
தமிழக சட்டசபையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நிகழ்த்திய உரை முடிவில், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை இடம் பெறாததால் கோபமடைந்துள்ள காங்கிரஸ், கவர்னரிடம் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளது.கவர்னர் உரை மீதான விவாதத்தின் போது, தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை இல்லாமல், கவர்னர் உரையை படிக்க வைத்த,

தமிழக சட்டசபையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நிகழ்த்திய உரை முடிவில், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை இடம் பெறாததால் கோபமடைந்துள்ள காங்கிரஸ், கவர்னரிடம் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளது.



latest tamil news


கவர்னர் உரை மீதான விவாதத்தின் போது, தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை இல்லாமல், கவர்னர் உரையை படிக்க வைத்த, தமிழக அரசை பாராட்டுவதாக கூறினார். இது, தேசிய உணர்வாளர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய சிந்தனையுடன் செயல்படும் காங்., உறுப்பினர்கள், 18 பேர் சட்டசபையில் இருந்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தமிழக காங்கிரசின், 'டுவிட்டர்' பதிவில், 'ஜெய் ஹிந்த் - இந்தியாவுக்கான பெருமை' என, பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக காங்., சட்டசபை கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:கவர்னர் உரையின் முடிவில், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை இடம் பெறுவது வழக்கம். அப்படியொரு வார்த்தை இடம் பெற்றாக வேண்டும் என்பது கட்டாயமில்லை.இருந்தாலும், இந்த வார்த்தை செண்பகராமன் பிள்ளையால் உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.'வாழ்க இந்தியா; வெல்லட்டும் இந்தியா' என்ற பொருளில் அமைந்த, அந்த வார்த்தையின் புனிதத் தன்மையையும், வலிமையையும் உணர்ந்து தான், முன்னாள் முதல்வர் கருணாநிதி, செண்பகராமனுக்கு சிலை அமைத்து அவரை போற்றி புகழ்ந்தார்.அப்படிப்பட்ட தலைவரின் வழி நிற்கும் தி.மு.க., ஆட்சியில், இப்படி சர்ச்சை ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். என்ன காரணத்துக்காக, 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை, கவர்னர் உரையில் இடம் பெறவில்லை என்பது குறித்து, அரசு தரப்பில் விளக்கமோ, காரணமோ சொல்லப்படவில்லை.

இந்த சூழலில், சட்டசபையில் ஈஸ்வரன் தன் கருத்துகளை பதிவு செய்தார். அரசுக்கு ஆதரவாக அவர் பேசியது அவரது சொந்த கருத்து தான்; அது ஏற்கக் கூடியது அல்ல.அவர் பேசிய போது, சபையில் முதல்வர் ஸ்டாலின் இல்லை. அந்த நேரத்தில், சட்டசபை குழுக்கள் அமைப்பு தொடர்பான விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. பொதுக்கணக்கு குழுவுக்கு உறுப்பினர்கள் தேர்வு நடந்தது. அதற்காக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அங்கு சென்று இருந்தோம். அதனால், ஈஸ்வரன் சபையில் பேசும்போது, எங்களால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை. அவர் பேசிய சிறிது நேரத்தில், சபையின் அன்றைய நிகழ்வு முடிந்து விட்டது. இருந்தாலும், ஈஸ்வரனின் சர்ச்சை பேச்சை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தோம்.ஈஸ்வரனும், உள்நோக்கம் எதுவும் இன்றி தான் பேசியிருக்க வேண்டும். இருந்தாலும், அவரது கருத்து ஆட்சேபத்துக்குரியது என்பதால், அந்த பேச்சை, சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனக்கேட்டு, கவர்னரிடம் காங்., சார்பில் மனு அளிக்க இருக்கிறோம்.


latest tamil news


ஒன்றிய அரசு சரியா?'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையின் புனித தன்மையை அறிந்ததால் தான், காங்., மேடைகளில் அதை முழங்கி வருகிறோம். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா, எல்லா மேடையிலும், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை குறிப்பிட மறுத்ததில்லை. இந்த விஷயத்தில், தமிழக அரசு சரியான விளக்கம் அளித்து இருக்க வேண்டும். ஒன்றிய அரசு சரியா?மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என அழைப்பதில் காங்கிரசை பொறுத்தவரை, தவறு ஏதும் இல்லை. அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரே, 'யூனியன் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா' என்று தான் சொல்லி இருக்கிறார். அதேபோல, மத்திய அரசால், ஹிந்தி திணிக்கப்படுகிறது என்கின்றனர். ஹிந்தியை கட்டாயப்படுத்தி திணிப்பது தவறு.ஆனால், ஹிந்தியை யாரும் விரும்பி படிப்பதை, எதை கொண்டும் தடுக்கக் கூடாதுஇவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arabuthamilan - Manama,பஹ்ரைன்
29-ஜூன்-202113:57:52 IST Report Abuse
arabuthamilan வேலையற்றதுகள் கொரோனா வார்டுல இவனுங்களுக்கு டூட்டி போடணும். நாட்டு நலனுக்கும் மக்களும் நல்லது செய்யாம இப்படி காலத்தையும் உழைப்பையும் வீண் விரயம் செய்கிற அரசியல் வியாதிகள் . .
Rate this:
Cancel
HINDS -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூன்-202116:55:15 IST Report Abuse
HINDS ஒருத்தன் டெய்லி அனாவசியமா வீண் பிரச்சனை கிளப்புரான்அவன் வவாயே இல்லாதபோகப்பபோகுது
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
28-ஜூன்-202116:48:43 IST Report Abuse
r.sundaram ஏன் இந்த மனு கொடுத்தல்? உங்கள் கூட்டாளிகள்தானே இந்த உரையை தயார் செய்தது. பின் அவர்களிடம் நேரிடையாக கேப்பது தானே? ஏன் கவர்னர் மூலம்? எய்தவனை விட்டுவிட்டு அம்பை நோவதேன்? இதிலும் இரட்டை வேடமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X