சென்னை : கொரோனா குறைந்த சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழுமம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழுமமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை ௫ வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள வங்கி கிளைகளில் 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும்.இவற்றில் வாடிக்கையாளர் பரிவர்த்தனை நேரம் காலை 10:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரையும்; வங்கி வேலை நேரம் மாலை 4:00 மணி வரையும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக அலுவலகங்கள் மற்றும் இதர அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் வழக்கம் போல செயல்படும்இரண்டாம் மூன்றாம் வகையில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள வங்கி கிளைகள் 100 சதவீத ஊழியர்களுடன் வழக்கம் போல செயல்படலாம்.
வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை நேரம் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரையும்; வங்கி வேலை நேரம் மாலை 5:00 மணி வரையும்அனுமதிக்கப்பட்டுள்ளது.நிர்வாக அலுவலகங்கள் உட்பட பிற அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் வழக்கம் போல செயல்படும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE