ஆலோசனைக்கு பின் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு

Updated : ஜூன் 28, 2021 | Added : ஜூன் 28, 2021 | கருத்துகள் (15) | |
Advertisement
திருச்சி : ''ஐ.சி.எம்.ஆர்., வழிக்காட்டல், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று, முதல்வருடன் ஆலோசனை செய்த பின்பு தான், பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்,'' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.திருச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்

திருச்சி : ''ஐ.சி.எம்.ஆர்., வழிக்காட்டல், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று, முதல்வருடன் ஆலோசனை செய்த பின்பு தான், பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்,'' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.latest tamil news
திருச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக, வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 1 மதிப்பெண்கள் பள்ளிக்கல்வித்துறையிடம் உள்ளது. அதன் அடிப்படையில், விரைவாக பிளஸ் 2 மதிப்பெண் வெளியிடப்படும்.கொரோனா தாக்கம் முழுமையாக கட்டுக்குள் வந்த பின், மாணவர்களுக்கு கேடு ஏற்படாத நாட்களில்தான் பள்ளிகள் திறக்கப்படும். அது வரை கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவே பாடங்கள் கற்பிக்கப்படும்.


latest tamil newsதற்போது, கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.இருப்பினும், உளவியல் ரீதியாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். மூன்றாவது அலை வரும், எனக் கூறுகின்றனர். எனவே, ஐ.சி.எம்.ஆர் வழிக்காட்டல், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று, முதல்வருடன் ஆலோசனை செய்த பின், பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayalekshmi - Thirunelveli,இந்தியா
05-ஜூலை-202115:26:05 IST Report Abuse
Jayalekshmi 8 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளி பாடப் புத்தகங்களை புரட்டிப் பார்த்தால், அவை அனைத்தும் ஏறக்குறைய கல்லூரியில் பயிலும் அளவிற்கு உள்ளது. ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருந்தால் அவர்களில் 4 பேராலேயே இவற்றை புரிந்து கொள்ள முடியும். இதில் ஆன்லைன் ல் கற்பது இயலாது. பள்ளியில் இவ்வளவு கற்க வேண்டுமென்றால் , கல்லூரியில் என்ன கற்பார்கள். பாடங்கள் குறைக்கப் பட்டு மதிப்பீட்டு முறையும் மாற்றி அமைக்கப் படலாம்.
Rate this:
Cancel
Allirani - Perambalur,இந்தியா
02-ஜூலை-202117:35:28 IST Report Abuse
Allirani Pallikalai sikiram thiraka veandum avar galin vazkai mikavum mukiyam athanal palli galai thiranthu avargal katral arivai valarka veandum
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
28-ஜூன்-202114:52:29 IST Report Abuse
INDIAN Kumar மூன்றாவது அலை எப்போது வர வேண்டும் என்று தயாரிப்பாளரும் இயக்குனரும் முடிவு செய்வார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X