சிலர் டுவிட்டரில் மட்டுமே இயங்குகிறார்கள்: நட்டா தாக்கு

Updated : ஜூன் 28, 2021 | Added : ஜூன் 28, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
புது டில்லி: பீகார் மாநில பா.ஜ.க., செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா, கோவிட்டால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பா.ஜ.க.,வினர் வீதியில் இறங்கி உதவுவதாகவும், சிலர் டுவிட்டரில் மட்டுமே இயங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவை மறைமுகமாக தாக்கினார்.வீடியோ கான்ப்ரன்ஸ் வாயிலாக மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று நட்டா பேசியதாவது:

புது டில்லி: பீகார் மாநில பா.ஜ.க., செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா, கோவிட்டால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பா.ஜ.க.,வினர் வீதியில் இறங்கி உதவுவதாகவும், சிலர் டுவிட்டரில் மட்டுமே இயங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவை மறைமுகமாக தாக்கினார்.latest tamil news


வீடியோ கான்ப்ரன்ஸ் வாயிலாக மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று நட்டா பேசியதாவது: 'கட்சிக்கு இணையானது சேவை' என்ற தாரக மந்திரத்தை நாம் வாழ்க்கையாக கொண்டுள்ளோம். நமது கட்சித் தொண்டர்கள் இரண்டாவது அலையின் போது தேவைப்படுபவர்களுக்கு பயமின்றி உதவினார்கள். மற்றவர்கள் டுவிட்டரில் மட்டுமே சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். பாதுகாப்பான இடங்களில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர். எமர்ஜென்சியின் போது ஜெயபிரகாஷ் நாராயண் வீட்டிற்கு வெறுமனே வந்தால் கூட கைது செய்வார்கள். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நம் தலைமுறை செய்த தியாகங்களைப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும்.


latest tamil news


லாலுவின் ஆட்சியின் கீழ் இருந்த நாட்களையும் அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டும். மக்கள் சூரியன் மறைந்த பிறகு வெளியே வரவே பயந்தார்கள். மருத்துவர்கள், கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற சம்பவங்களால் பீகாரை விட்டே வெளியேறத் தொடங்கினர். வேளாண் சட்டங்களில் உள்ள ஆட்சேபனைகள் குறித்து சுட்டிக்காட்டும்படி அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேட்டபோது, போராட்டக்காரர்கள் எதையும் சுட்டிக்காட்டவில்லை. ஆனால் அவர்கள் ஒரு இயக்கம் ஆரம்பித்துள்ளனர். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் முன்னேற்றத்திற்காக மோடி அரசு செய்துள்ள பணிகள் பற்றி பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். “கோவிட்டிலிருந்து எனது வாக்குச்சாவடி விடுபட்டது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது” என்ற மந்திரத்துடன் செயல்படுங்கள். இவ்வாறு பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
29-ஜூன்-202102:30:32 IST Report Abuse
Raj பாத்து பாத்து நட்டாஜி. பிரஷர் அதிகமாகிவிடும் உங்களுக்கு.
Rate this:
Cancel
29-ஜூன்-202100:41:18 IST Report Abuse
ஆப்பு டுவிட்டரில் 60 லட்சம் பின் தொடர்பவர்களோடு பா.ஜ பெரியவர் ஒருத்தர் முதலிடத்தில் இருக்காரு. நட்டுவுக்குத் தெரியுமா? வாயாலேயும் வடை சுடுவதில் முதலிடம்.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
28-ஜூன்-202123:37:07 IST Report Abuse
Rajas முன்பெல்லாம் உங்கள் ஆட்கள் சோசியல் மீடியாக்களில் பொய் செய்திகளை வெளியிட்டார்கள். கொஞ்ச நாளிலே உங்கள் சாயம் வெளுத்து விட்டது. பலர் அந்த செய்திகள் பொய் என்று கண்டு பிடித்து இப்போது ஆதாரத்தோடு உண்மையை எழுதுகிறர்கள். (உதாரணம் காங்கிரஸ் அரசு லட்சம் கோடிகளில் பெட்ரோல் டீசல் பணத்தை அரபு நாடுகளுக்கு பாக்கி வைத்தது. அதை பிஜேபி அரசு கொடுத்தது. எதிர்கேள்வி பெட்ரோல் நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய பணத்தை அரசு ஏன் கொடுத்தது.) அவர்களிடம் உங்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X