பொது செய்தி

இந்தியா

ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதம்: நிர்மலா சீதாராமன்

Updated : ஜூன் 28, 2021 | Added : ஜூன் 28, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
புதுடில்லி: கோவிட்டால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.டில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நாங்கள் 8 பொருளாதார நிவாரண திட்டங்களை அறிவிக்க உள்ளோம். அதில் 4 திட்டங்கள் முற்றிலும் புதியவை, ஒன்று சுகாதார உள்கட்டமைப்பு
Credit Guarantee Scheme, Nirmala Sitharaman, Finance Minister, நிர்மலா சீதாராமன், கடனுதவி, நிதியமைச்சர், கடன், தொழில்துறை

புதுடில்லி: கோவிட்டால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நாங்கள் 8 பொருளாதார நிவாரண திட்டங்களை அறிவிக்க உள்ளோம். அதில் 4 திட்டங்கள் முற்றிலும் புதியவை, ஒன்று சுகாதார உள்கட்டமைப்பு சம்மந்தப்பட்டவை. கோவிட்டால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு அதிக நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளோம். அதாவது, கோவிட்டால் பாதிப்புக்குள்ளான துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். அதில், சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும்.


latest tamil news


மருத்துவமனைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்க ரூ.100 கோடி வரை கடன் வழங்கப்படும். 7.95 சதவீத வட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு இந்த கடன் வசதி அமலில் இருக்கும். பிற துறைகளுக்கான கடனுக்கு வட்டி 8.25 சதவீதமாக இருக்கும். மற்ற துறைகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும். அவசர கால கடன் வசதியாக தொழில்துறையை சேர்ந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். அரசு உத்தரவாதத்துடன் வங்கிகள் மூலமும் தொழில்துறைக்கு கடனுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க சுற்றுலா பயணிகளுக்கு சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
29-ஜூன்-202118:36:07 IST Report Abuse
g.s,rajan கடனாக கொடுக்கிறேன் அப்படின்னு சொல்றீங்க ,வியாபாரம் போனி ஆகாமல் போனால் வட்டியை எப்படி கட்டுவது ??? ஜி.எஸ்.ராஜன் சென்னை ,
Rate this:
Cancel
PKN - Chennai,இந்தியா
29-ஜூன்-202108:16:07 IST Report Abuse
PKN எண்ணையில் சு‌ட்டவடை பசியாற்றும் ஆற்றாதே நா‌வினா‌ல் சு‌ட்ட வடை
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
29-ஜூன்-202105:07:36 IST Report Abuse
g.s,rajan கடன் வாங்கியவர்கள் பொருளாதாரம் நிச்சயம் உயரும் .இந்தியாவில் மிகப் பெரும் கோடீஸ்வரர்களின் பொருளாதாரம் மிக மிக உயர்ந்துவிட்டது அம்பானி அதானியின் பொருளாதாரம் இமய மலை அளவு உயர்ந்து விட்டது ஆமா ரிசர்வ் வங்கியில் நமது நாட்டின் அவசர காலத் தேவைக்காக வைத்து இருந்த அவசர கால நிதியை சும்மாத்தானே இருக்கிறது என்று அதை மிகப்பெரும் கோடீஸ்வரர்களாக அம்பானி அந்த ஒரு லட்சத்தி எண்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் ,அம்பானி மற்றும் அதானி போன்ற மிகப்பெரும் கோடீஸ்வரர்களுக்கு இன்னும் பல கோடீஸ்வரக் கோமான்களுக்கு அப்படியே சொளையா தாரை வார்த்துட்டீங்களே நிம்மி அவர்களே ,இது நியாயமா ???வாராக்கடனை இப்படித்தான் தள்ளுபடி பண்ணனுமா ??இதை நமது நாட்டின் தேவைகளுக்கு பயன்படுத்தி இருக்கலாமே ??தனியாருக்கு ஏன் தாரை வார்க்கணும் ??? ஜி.எஸ்.ராஜன், சென்னை ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X