சட்டசபையில் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் முழக்கங்களை எழுப்புவோம்: முருகன்| Dinamalar

சட்டசபையில் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் முழக்கங்களை எழுப்புவோம்: முருகன்

Updated : ஜூன் 28, 2021 | Added : ஜூன் 28, 2021 | கருத்துகள் (76) | |
சென்னை: தமிழக சட்டசபையில் பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஹிந்த், வந்தே மாதரம் முழக்கங்களை தொடர்ந்து எழுப்புவோம் என தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.தமிழகத்தில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் வடபழநி முருகன் கோவிலில் பா.ஜ., தலைவர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர்
Jaihind, Tamilnadu, BJP, தமிழகம், பாஜக, ஜெய்ஹிந்த்

சென்னை: தமிழக சட்டசபையில் பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஹிந்த், வந்தே மாதரம் முழக்கங்களை தொடர்ந்து எழுப்புவோம் என தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் வடபழநி முருகன் கோவிலில் பா.ஜ., தலைவர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை தமிழக அரசு எவ்வளவு பயன்படுத்தியது, எவ்வளவு வீணடித்தது என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தடுப்பூசி முகாம்களில் தி.மு.க வினர் அதிகாரிகளை மிரட்டி டோக்கன்களை பறிப்பதை நிறுத்தினால் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும். பற்றாக்குறைக்கு திமுக தான் காரணம்.


latest tamil news


தேர்தல் செலவுக்கு கட்சி சார்பில் வேட்பாளர்களுக்கு பணம் வழங்கவில்லை. நாங்கள் தேர்தல் செலவுக்கு 4 கோடி கொடுத்தால் தானே ஹெச்.ராஜாவிடம் அதுப்பற்றி விசாரிக்க முடியும். எச்.ராஜா மீது நடைபெறும் விசாரணை உட்கட்சி விவகாரம் தான். அது கட்சி பார்த்துக்கொள்ளும். தமிழக சட்டசபையில் பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஹிந்த், வந்தே மாதரம் முழக்கங்களை தொடர்ந்து எழுப்புவோம். பிரிவினையை தூண்டும் வகையில் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கத் துவங்கினார்கள். புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவி ஏற்கும் போது ஒன்றிய அரசு என்ற பயன்படுத்துவது குறித்து பின்னர் பேசுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X