'டி20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர்; யு.ஏ.இ.,க்கு மாற்றம்

Updated : ஜூன் 28, 2021 | Added : ஜூன் 28, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி; இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த ‛டி20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர், கோவிட் பரவலால், ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ) நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் உலக கோப்பை ‛டி20' கிரிக்கெட் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பணிகள் நடைபெற்றுக்
T20WorldCup, India, UAE, BCCI, ICC

புதுடில்லி; இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த ‛டி20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர், கோவிட் பரவலால், ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ) நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் உலக கோப்பை ‛டி20' கிரிக்கெட் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், நாடு முழுவதும் கோவிட் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கோவிட் பரவல் காரணமாக உலக கோப்பை தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே கோவிட் பரவலால் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டு எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரசு எமிரேட்சில் (யு.ஏ.இ) நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்தது. அதேபோல், உலக கோப்பை தொடரையும் வேறு நாட்டுக்கு மாற்றப்படும் என செய்திகள் வெளிவந்தன.


latest tamil news


இதனை உறுதிப்படுத்தும் விதமாக யு.ஏ.இ.,யில் ‛டி20' உலக கோப்பை தொடர் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இந்த தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) இன்று பிசிசிஐ தெரிவித்துள்ளதாகவும், உலக கோப்பை தொடரை எப்போது நடத்துவது என்ற முடிவை ஐசிசி எடுக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜூன்-202106:54:21 IST Report Abuse
நந்தகுமார் து உலகத்துக்கு இப்போ இது தான் ரொம்ப முக்கியம்.அவனவன் சாப்பாட்டுக்கே வழி இருக்கிறார்கள் இந்த கொரான பரவலில்.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
29-ஜூன்-202105:44:13 IST Report Abuse
மதுரை விருமாண்டி ஆட்டம் ஆரம்பிக்கும் போதும், முடிவின் போதும் இந்திய அணிகள் செய்கிந்த் சொல்லுமா?
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
29-ஜூன்-202101:12:21 IST Report Abuse
Sathish ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாகிஸ்தானுக்கு இரண்டாவது சொந்த ஊர் போல. நிச்சயம் உலகக்கோப்பையை வெல்ல அவர்களுக்கு வாய்ப்பு அதிகம். வழக்கம் போல இந்திய அணி உப்பு சப்பு இல்லாத காரணங்களை சொல்லி கோட்டை விட்டுவிட்டு வருவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X