ஆண்டாள் சர்ச்சை விவகாரம்; வழக்கை வாபஸ் பெற்றார் வைரமுத்து

Updated : ஜூன் 28, 2021 | Added : ஜூன் 28, 2021 | கருத்துகள் (93)
Advertisement
சென்னை: ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியிட்டதற்காக பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை பாடலாசியர் வைரமுத்து திரும்ப பெற்றுக் கொண்டார்.கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பாடலாசிரியர் வைரமுத்து, தமிழ் நாளிதழில் கட்டுரை எழுதியிருந்தார். அதில், பெண் தெய்வம் ஆண்டாள் குறித்து
வைரமுத்து, ஆண்டாள், வாபஸ்

சென்னை: ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியிட்டதற்காக பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை பாடலாசியர் வைரமுத்து திரும்ப பெற்றுக் கொண்டார்.

கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பாடலாசிரியர் வைரமுத்து, தமிழ் நாளிதழில் கட்டுரை எழுதியிருந்தார். அதில், பெண் தெய்வம் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமுதாய நல்லிணக்க பேரவையைச் சார்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி பாடலாசிரியர் வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.


latest tamil newsஅந்த மனுவில், ஆண்டாள் குறித்த கருத்து தன்னுடைய கருத்து அல்ல எனவும், அமெரிக்க எழுத்தாளர் கருத்தை தாம் சுட்டிகாட்டி இருந்ததாகவும் கூறியிருந்தார். தவறான கருத்துகள் எதையும் குறிப்பிடவில்லை எனவும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவோ கருத்து தெரிவிக்கவில்லை எனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வைரமுத்துவிற்கு எதிராக சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி வைரமுத்து தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி தண்டபாணி முன் இன்று (ஜூன் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது வைரமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை திரும்ப பெறுவதாகவும், புகாரின் விசாரணையை சந்திப்பதாகவும் தெரிவித்தார். இதை ஏற்று வைரமுத்து மனுவை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
03-ஜூலை-202118:04:47 IST Report Abuse
Rasheel ஒரு மனிதனின் தராதரம் அவனது செயல்களாலும் பேச்சாலும் வெளி வருகிறது. இதனால் தான் சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்று சொல்லி வைத்தார்கள். இவன் தந்தை இவனை பெற எந்நூர்றான் கொல் என்பது அவனது வளர்ப்பையும் காட்டி கொடுக்கிறது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202117:08:07 IST Report Abuse
J.V. Iyer இப்போது கழக ஆட்சி. வைரமுத்து வழக்கில் வெற்றிபெற வாய்ப்பு மிக அதிகம்.
Rate this:
Cancel
vivek c mani - Mumbai,இந்தியா
29-ஜூன்-202110:27:27 IST Report Abuse
vivek c mani ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பதற்கு ஓர் உதாரணம். ஹிந்துக்கள் மனம் புண் படும் படி பேசி பின்பு அதை யாரோ ஒருவர் கூறியதை சொன்னேன் என மழுப்பல் செய்யும் மனிதர் , மற்ற மதங்களை பற்றியும் பல தரம் தாழ்ந்த பேச்சுக்களை மேற்கோள் காட்டி பேசாதது ஏனோ? Dr.Jekyll and Mr.Hyde கதை ஞாபகத்திற்கு வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X