சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

தலைக்கு வந்தது...!

Added : ஜூன் 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தலைக்கு வந்தது...!'ஒவ்வொரு நிமிடமும் பெரும் அவஸ்தையாகவே கழிகிறது. எப்போது என்ன நடக்கும் என்றே தெரியவில்லை' என, கலக்கத்துடன் கூறுகின்றனர், நாடு முழுதும் உள்ள பா.ஜ., நிர்வாகிகள்.மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின், பா.ஜ., மேலிடம் கட்சி நிர்வாகிகள் மீது கண்டிப்பு காட்ட துவங்கியுள்ளது.உத்தர பிரதேசம், திரிபுரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்


அக்கம் பக்கம்


தலைக்கு வந்தது...!



'ஒவ்வொரு நிமிடமும் பெரும் அவஸ்தையாகவே கழிகிறது. எப்போது என்ன நடக்கும் என்றே தெரியவில்லை' என, கலக்கத்துடன் கூறுகின்றனர், நாடு முழுதும் உள்ள பா.ஜ., நிர்வாகிகள்.மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின், பா.ஜ., மேலிடம் கட்சி நிர்வாகிகள் மீது கண்டிப்பு காட்ட துவங்கியுள்ளது.உத்தர பிரதேசம், திரிபுரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் உட்கட்சி பூசலும், பா.ஜ., தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இந்த மாநிலங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சமீபத்தில் டில்லிக்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தொங்கிய முகத்துடன் திரும்பி வந்தனர். மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக சமீப காலமாக வெளியாகும் தகவல்களும், பா.ஜ., நிர்வாகிகளிடையே ஆர்வத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தன. சமீபத்தில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, நாடு முழுதும் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், 'சரியாக செயல்படாதவர்களை, 'லெப்ட் அண்டு ரைட்' வாங்க போகிறார்' என்ற பீதியுடனேயே, நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. 'மோடி அரசின் ஏழாண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். கிராமம் கிராமமாக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்' என, பொதுவாக பேசி, கூட்டத்தை நிறைவு செய்தார் நட்டா. 'தலைக்கு வந்தது, தலைப்பாகையுடன் போச்சு' என, பெருமூச்சுடன் கலைந்து சென்றனர் பா.ஜ., நிர்வாகிகள்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagashivam - Thiruvallur,இந்தியா
29-ஜூன்-202120:45:07 IST Report Abuse
Nagashivam நாடு முழுவதும் கொரோனா மட்டுமில்லாமல், ஊழல், லஞ்சம், அனைத்து பொருட்களும் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், காஸ் விலை விண்ணை முட்டுகிறது. இடையில் கட்சியினரிடையே கோஷ்டி சண்டை இந்நிலையில் பிஜேபியின் நிர்வாகத்திகளால் கட்சியை எப்படி வளர்க்கமுடியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X