மும்பை: ஒரு நாளில் 15 லட்சம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்த மஹாராஷ்டிரா அரசு தயாராக இருப்பதாக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அலை தொடர்பான அச்சம் மாநிலத்தில் பரவிவருவதால் மஹாராஷ்டிர குடிமக்களுக்கு நம்பிக்கை அளிக்க அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டெல்டா பிளஸ் ரக வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால் மகாராஷ்டிர குடிமக்கள் மிக எச்சரிக்கையாக ஊரடங்கைப் பின்பற்றி அலுவலகங்களில் பணி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சபர்பன் மலாட் பகுதியில் ஜம்போ கோவிட் கேர் சென்டர்-ஐ திறந்துவைத்த உத்தவ் தாக்கரே பொதுமக்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாற்றினார். மஹாராஷ்டிர அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் குறைவான அளவே அனுமதிக்கப்பட்டு பல படுக்கைகள் காலியாக உள்ளன.

ஆனால் இதற்காக டெல்டா பிளஸ் ரக வைரஸை குறைத்து எடைபோடக் கூடாது என்றும் பொதுமக்கள் மிக கவனத்துடன் சமூக விலகலைப் பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE