இது உங்கள் இடம் : 'மன்னார்குடி' கும்பலிடம் சிக்காதீர்!

Updated : ஜூன் 29, 2021 | Added : ஜூன் 29, 2021 | கருத்துகள் (64)
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :எஸ்.ஏ.தீக்கனல் சவரியார், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...' என, தன் அடிப்பொடிகள் மூலம் நாடகம் நடத்தி வருகிறார் சசிகலா. 'அ.தி.மு.க.,வின் சட்டசபை தேர்தல் தோல்விக்கு, நான் தலைமை ஏற்காதது தான் காரணம்' என்று சொல்லும் சசிகலா,


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

எஸ்.ஏ.தீக்கனல் சவரியார், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...' என, தன் அடிப்பொடிகள் மூலம் நாடகம் நடத்தி வருகிறார் சசிகலா. 'அ.தி.மு.க.,வின் சட்டசபை தேர்தல் தோல்விக்கு, நான் தலைமை ஏற்காதது தான் காரணம்' என்று சொல்லும் சசிகலா, அ.ம.மு.க., உருவான போது ஏன் தடுக்கவில்லை? அ.ம.மு.க., என்றொரு அவசர கட்சியை தினகரன் ஆரம்பித்து, தி.மு.க.,வின் வெற்றிக்கு மறைமுகமாக துணைபுரிந்தார் என்பது நாடறிந்த உண்மை.



latest tamil news



அ.தி.மு.க.,விற்கு எதிராக செயல்பட்ட தினகரனை, சசிகலா ஏன் கண்டிக்கவில்லை? அப்போது எல்லாம் அரசியலிலிருந்து ஒதுங்கி கொள்வதாய் அறிவித்து, வேடிக்கை பார்த்த சசிகலா, இன்று நாடகம் போடுகிறார். 'அ.தி.மு.க.,விற்கு தலைமை ஏற்பேன்' என்று கூக்குரலிடுவது தான், கட்சிவளர்ச்சிக்கான தியாகமா என்பது, அவருக்கே வெளிச்சம். சசிகலா, அ.தி.மு.க.,வை கைப்பற்றினால், அக்கட்சி 'மன்னார்குடி' கும்பலால் சூறையாடப்படும் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணமான தினகரனுடன் இணைந்து செயல்பட்டவர், அக்கட்சிக்கு தலைமை ஏற்க விரும்புவது எவ்வகையில் நியாயம்? சசிகலாவுடன் உறவாடும் நபர்களை அ.தி.மு.க.,வில் இருந்து நீக்குவதே, அக்கட்சியை பாதுகாக்கும் நடவடிக்கை.


latest tamil news



சசிகலாவை ஒதுக்கி வைப்பதே அ.தி.மு.க.,விற்கு பாதுகாப்பு என்பதை, கால் நுாற்றாண்டுக்கும் மேலான அரசியல் மூலமாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அபாரமான பாடம் கற்றுக் கொடுத்து சென்றுள்ளார். சாதாரண அடிமட்ட தொண்டனும், முதல்வர் பதவி வரை உயர்வடையலாம் என்பது, தமிழக அரசியலில் அ.தி.மு.க.,விற்கு மட்டுமே உரிய சிறப்பம்சமாகும். அத்தகைய பெரும் சிறப்பை, மன்னார்குடி வகையறாவிடம் தாரை வார்த்து,அடிமைப்பட்டு கிடக்க வேண்டாம், அ.தி.மு.க., தொண்டர்களே!

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
30-ஜூன்-202103:05:58 IST Report Abuse
mindum vasantham அதே போல் கமலஹாசண்ணை உள்ளே விட கூடாது , நம் நாடு , பண்பாடு பற்றி தவறாக பேசி விட்டு ஒரு இனத்தை சார்ந்தவர் என்பதற்காக மட்டும் ஆதரவு கொடுக்க கூடாது
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
29-ஜூன்-202121:46:01 IST Report Abuse
Ram ரெண்டு இட்லி - ஒரு கோடி -நீ பார்த்த -
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
29-ஜூன்-202121:43:44 IST Report Abuse
Ram இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X