சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு

Updated : ஜூன் 29, 2021 | Added : ஜூன் 29, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : ''தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு, 'டெல்டா பிளஸ்' தொற்று உறுதியாகி உள்ளது; இதுவரை 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். பின், பாலுாட்டும் தாய்மார்களுக்கு

சென்னை : ''தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு, 'டெல்டா பிளஸ்' தொற்று உறுதியாகி உள்ளது; இதுவரை 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.latest tamil news


தமிழகத்தில் டெல்டா பிளஸ் பாதிப்பு 10 ஆக உயர்வு ஒருவர் மரணம் , மற்றவர் குணம்


சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். பின், பாலுாட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார். அதன்பின், அவர் அளித்த பேட்டி:கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில்,ஏப்ரல், மே மாதங்களில் ஆயிரக் கணக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.


latest tamil newsபரிசோதனை முடிவில், ஏற்கனவே ஒன்பது பேர், டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு, மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 10 பேர், டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்; மற்ற அனைவரும் குணமடைந்து, இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர்.'தடுப்பூசி சம்பந்தமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என, தமிழக பா.ஜ.,வினர் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி தொடர்பான தகவல்களை, தினசரிபத்திரிகையாளர் சந்திப்பில், மூன்று அல்லது நான்கு முறை கூறி வருகிறோம்.

தமிழகத்துக்கு இதுவரை, ஒரு கோடியே, 44 லட்சத்து,39 ஆயிரத்து, 940 தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில், ஒரு கோடியே, 41 லட்சத்து, 50 ஆயிரத்து, 249 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு லட்சத்து, 7,375 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. நேற்று இரண்டு லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.தமிழக அரசு 99.84 கோடி ரூபாய் செலுத்தி, 29 லட்சத்து, 92 ஆயிரம் தடுப்பூசிகளை கொள்முதல்செய்துள்ளது. மத்திய அரசு 1.14 கோடி தடுப்பூசிகளை கொடுத்துள்ளது. இதுதான் ஒட்டு மொத்த செய்தி.


latest tamil newsஇதை, பா.ஜ.,வினர் வெள்ளை அறிக்கையாகஎடுத்துக் கொண்டாலும், எங்களுக்கு கவலை இல்லை.'அனைத்து தரப்பினரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டக்கூடாது. கிராம மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்' என, பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே, தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை, மத்திய அரசிடம் பெற்று தரும்படி, பா,ஜ.,வினரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜூன்-202117:08:24 IST Report Abuse
oce தொற்று தரும் ஆள் செத்ததாக தகவல் இல்லை ஆனால் தொற்றை வாங்கிய ஆள் தான் சாகிறான்.
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜூன்-202115:46:32 IST Report Abuse
ram இந்த விபரம் எந்த அளவுக்கு உண்மை... சுகாதாரத் துறை அதிகாரி சொன்னாருன்னா நம்பலாம்.. இந்த செய்தி அமைச்சர் சொன்னதாக செய்தி போட்டதாலே தான் சந்தேகமாக இருக்கு.. அமைச்சருங்க அந்த அளவுக்கு அறிவாளிங்களாக இருக்காங்க...
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
29-ஜூன்-202114:05:17 IST Report Abuse
Vena Suna 'டெல்டா பிளஸ்' தொற்று மிக மிக விரைவாக பரவக் கூடியது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X