ரூ.1 கோடி கொடுத்தால் விண்வெளி செல்லலாம்

Updated : ஜூன் 29, 2021 | Added : ஜூன் 29, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
வாஷிங்டன்-அமெரிக்க நிறுவனம் ஒன்று விண்வெளி சுற்றுலாவுக்கு டிக்கெட் விற்பனை செய்யத் துவங்கி உள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 'ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ்' என்ற நிறுவனம் பிரமாண்ட பலுானில் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று பூமியின் அழகை ரசிக்கும் வாய்ப்பை அளிக்க உள்ளது.இது குறித்து இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஜேன் பான்ட்டர்

வாஷிங்டன்-அமெரிக்க நிறுவனம் ஒன்று விண்வெளி சுற்றுலாவுக்கு டிக்கெட் விற்பனை செய்யத் துவங்கி உள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 'ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ்' என்ற நிறுவனம் பிரமாண்ட பலுானில் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று பூமியின் அழகை ரசிக்கும் வாய்ப்பை அளிக்க உள்ளது.latest tamil news


இது குறித்து இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஜேன் பான்ட்டர் கூறியதாவது:பிரமாண்ட பலுானில் விண்வெளி சுற்றுலாவுக்கு மக்களை அழைத்துச் செல்லும் வர்த்தகத்தில் இறங்கியுள்ளோம். 6 மீட்டர் பலுானை ஹீலியம் வாயு வாயிலாக ஒரு கால்பந்து மைதானத்தின் விட்டத்திற்கு விரிவுபடுத்தி, விண்ணில் செலுத்துகிறோம். சமீபத்தில் ஆளில்லாமல் அனுப்பிய பலுான் வெற்றிகரமாக, 1 லட்சம் மீட்டர் உயரம் பறந்து, பத்திரமாக தரையிறங்கியது.இதைத் தொடர்ந்து மனிதர்களை பலுானில் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல உள்ளோம். ஆறு மணி நேர பயணத்திற்கு, ஒரு டிக்கெட் விலை 1 கோடி ரூபாய் என, நிர்ணயித்துள்ளோம். ஒரு பயணத்தில் கேப்டன் உட்பட எட்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும்.


latest tamil news


டிக்கெட் பதிவு துவங்கிய சில நிமிடங்களில் 300 பேர் பணம் செலுத்தி விட்டனர். அதனால் 2024ம் ஆண்டு வரை சுற்றுலா பயணத்திற்கான பதிவு முடிந்து விட்டது. 2025ம் ஆண்டுக்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது. இந்த பலுானில் ஒவ்வொருவருக்கும் தனித் தனி அறைகள் உள்ளன. விண்ணில் இருந்து பூமியை தெளிவாக பார்த்து ரசிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இணையம் வாயிலாக பூமியில் உள்ள உறவினர்களுடன் நேரடியாக பேசும் வசதியும் உள்ளது. இந்த திட்டம் சுற்றுலா ஆர்வலர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-ஜூன்-202113:22:06 IST Report Abuse
Lion Drsekar ஐயா தயவு செய்து எம்மக்களை ( யார் என்று உலகுக்கு தெரியும் ) மொத்தமாக அனைவரையும் அழைத்து செல்லுங்கள் மக்கள் அவர்களுக்காக வாக்கு அளிக்கவில்லை என்றாலும் பணம் கொடுக்க முன்வருவார்கள், முடிந்தால் அங்கேயே ஒரு இடத்தை காட்டுங்கள் அங்கேயே அவர்கள் தங்கிவிடுவார்கள், ஆண்ட வெளியாக இருந்தாலும் பட்டா போட்டு வாழும் திறமை உள்ளவர்கள்என்று சொல்ல மனம் தூண்டுகிறது, பிறகு நமக்கேன் வம்பு என்று உள்மனம் சமாதானப் படுத்துகிறது, எது எப்படியோ எம் மக்கள் விண்வெளியில் தங்கினால் சூரியன் சந்திரன் மற்றும் இருக்கும் கிரகங்களை தங்கள் பெயரில் .... வந்தே மாதரம்
Rate this:
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜூன்-202115:17:20 IST Report Abuse
Saravananதங்களின் பதிவுகளை விரும்பி படிப்பவன் நான், இப்போதெல்லாம் தங்கள் பதிவில் நகைச்சுவையும் தெரிகிறது வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
29-ஜூன்-202111:53:49 IST Report Abuse
Ramesh Sargam thamizhagaththilum idhupondru paloongal viduvom - dhimuka amaichar. நீட் தேர்வு ரத்து செய்வோம் endru koorinaargal. ரத்து seidhaargalaa? அதுபோல இந்த பலூன் விடுவதும்.
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
29-ஜூன்-202109:05:53 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே தமிழர்கள் தங்களது ஓட்டினை போட்டு சூனியம் வைத்து கொண்டது போல சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் செயல் என்று கருத வேண்டும்
Rate this:
K BALASUBRAMANIAN - sattur,இந்தியா
29-ஜூன்-202112:49:42 IST Report Abuse
K BALASUBRAMANIANஇந்த கட்டுரைக்கும் தமிழர்கள் போட்ட வோட்டுக்கும் என்ன சம்பந்தம்? மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X