சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆண்குழந்தையை ரூ.3.60 லட்சத்திற்கு விற்ற தாய் கைது

Updated : ஜூன் 29, 2021 | Added : ஜூன் 29, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
வந்தவாசி: வந்தவாசி அருகே ஆண் குழந்தையை ரூ.3.60 லட்சத்திற்கு விற்பனை செய்த வழக்கில் தாய் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் சரத்குமார் (29), பவானி(27) ஆகிய இருவரும் காதலர்கள். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பவானி பணியாற்றி வந்தார். இதனால், சரத்குமாரும் அங்கேயே சென்று திருமணம் செய்து கொள்ளாமல்
Baby, Sold, Tamilnadu

வந்தவாசி: வந்தவாசி அருகே ஆண் குழந்தையை ரூ.3.60 லட்சத்திற்கு விற்பனை செய்த வழக்கில் தாய் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் சரத்குமார் (29), பவானி(27) ஆகிய இருவரும் காதலர்கள். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பவானி பணியாற்றி வந்தார். இதனால், சரத்குமாரும் அங்கேயே சென்று திருமணம் செய்து கொள்ளாமல் தம்பதியாக வாழ்ந்து வந்தனர். அதில், அவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தனது குழந்தையை காதலன் கடத்தி விற்றுவிட்டதாக வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் பவானி புகார் அளித்துள்ளார்.


திருமணம் ஆகாமல் பிறந்த குழந்தை விற்ற தாய் கைது

latest tamil news
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் (ஜூன் 27) குழந்தையை மீட்டனர். மேலும், இதுதொடர்பாக தந்தை சரத்குமார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சரத்குமாரிடம் நடத்திய விசாரணையில், தாய் பவானியும் சேர்ந்து ரூ.3.60 லட்சத்திற்கு குழந்தையை விற்றது தெரியவந்தது.
இதனையடுத்து, தாய் உட்பட மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர். திருமணம் செய்யாமல் குழந்தையை பெற்றெடுத்த தாய், தந்தையரே குழந்தையை விற்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூன்-202104:33:51 IST Report Abuse
ஆப்பு இதுல என்ன பரபரப்பு? அந்த தம்பதியினருக்கு வேலை போயிருக்கும். குழந்தையை யாருக்கும் தத்துக் குடுக்க விடாமல் ஆயிரம் முட்டுக்கட்டைகள் போடும் அரசாங்கம். அவிங்களுக்கு நல்க வேலை வாய்ப்பைக் குடுக்க முடியாத அரசுகள். ஏதோ சட்டத்தைப் போட்டு கைது செய்கின்றன.
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
29-ஜூன்-202115:25:25 IST Report Abuse
Kalyan Singapore அந்த குழந்தையை யாராவது தத்து எடுத்திருந்தால் அவர்களிடமே விட்டு விடலாம் .திருட்டு தாய் தந்தையரை விட அநாதை விடுதிகளை விட அவர்கள் நன்றாகவே பார்த்துக்கொள்வார்கள் . சிங்கப்பூரில் இதுபோன்று மணமாகாமல் பிறந்து காப்பகத்தில் விடப்பட்டு இந்திய இங்கிலாந்து குடி மக்கள் கலப்பு திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியரால் தத்து எடுக்கப்பட்டு தற்பொழுது மிக பாசத்துடன் வளர்க்கப்படுகிறான் அவன் பத்தாவது பிறந்த நாளை கொண்டாட முடியவில்லையே ( Covid Lockdown காரணமாக ) என்று அவன் வளர்ப்புத்தாய் ( இங்கிலாந்து குடி மகள்) என் மனைவியிடம் நெஞ்சுருக அழுதது இப்போதும் கண் முன் நிற்கிறது
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
29-ஜூன்-202112:13:44 IST Report Abuse
Ramesh Sargam இனி அந்த குழந்தை அந்த 'திருட்டு' போலி பெற்றோர்களிடம் வளர்வது சரியல்ல. அந்த குழந்தையை ஏதாவது ஒரு சிறந்த குழந்தைகள் காப்பகத்தில் அல்லது ஆசிரமத்தில் விட்டு வளர்ப்பதுதான் சிறந்தது. இல்லையென்றால், இந்த போலி பெற்றோர்கள் அந்த குழந்தையை கொன்றுவிடுவார்கள். ஜாக்கிரதை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X