தவறான வரைபடம்: டுவிட்டர் நிர்வாகி மீது உ.பி., போலீசார் வழக்கு

Updated : ஜூன் 29, 2021 | Added : ஜூன் 29, 2021 | கருத்துகள் (19) | |
Advertisement
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர், லடாக்கை தனி நாடாக காட்டும் வரைபடத்தை வெளியிட்டதற்காக, டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மீது உ.பி., போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சமூக வலைதளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் புதிய தொழில்நுட்ப சட்டம் கடந்த மாதம் அமலுக்கு வந்தது. 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் இந்த
Twitter,டுவிட்டர்

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர், லடாக்கை தனி நாடாக காட்டும் வரைபடத்தை வெளியிட்டதற்காக, டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மீது உ.பி., போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமூக வலைதளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் புதிய தொழில்நுட்ப சட்டம் கடந்த மாதம் அமலுக்கு வந்தது. 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் இந்த சட்டத்துக்கு உட்பட்டு, நிபந்தனைகளை நிறைவேற்றி உள்ளன. 'டுவிட்டர்' சமூக வலைதளம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், விதிமுறைகளையும் அமல்படுத்தவில்லை.'சட்டங்களை பின்பற்றாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. விதிமுறைகள் அமல்படுத்தப்படாததை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்திற்கான சட்ட பாதுகாப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது.


latest tamil news


துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கங்களில் இருந்து 'புளூ டிக்' அகற்றப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டது. அதேபோல், முன் அறிவிப்பு இன்றி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டுவிட்டர் பக்கம் ஒரு மணி நேரம் முடக்கப்பட்டது.

இவ்வாறு, மத்திய அரசு - டுவிட்டர் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஜம்மு - காஷ்மீர், லடாக்கை தனி நாடாக காட்டும் வரைபடத்தை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு கூறியது. தொடர்ந்து, அந்த வரைபடத்தை டுவிட்டர் நீக்கியது.

இந்நிலையில், தவறான வரைபடத்தை காட்டியதற்காக டுவிட்டர் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி மணிஷ் மகேஸ்வரி மற்றும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் அமிர்தா திரிபாதி ஆகியோர் மீது உ.பி.,யின் புலந்த்ஷாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஐபிசி பிரிவு 505 (2) மற்றும் புதிய தகவல் தொழில்நுட்பச்சட்டம் பிரிவு 74ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மணிஷ் மகேஸ்வரி மீது உ.பி., போலீசார் பதிவு செய்யும் இரண்டாவது வழக்கு இதுவாகும். கடந்த வாரம், முஸ்லிம் நபர் ஒருவர் தாக்குதல் குறித்த வீடியோ தொடர்பாக மணிஷ் மகேஸ்வரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-202105:09:35 IST Report Abuse
Raj யுபி போலீசார் கோவிட் தலை விரித்தாடியபொழுது எங்கும் தென்படவில்லை.
Rate this:
Cancel
Shiva -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜூன்-202120:18:29 IST Report Abuse
Shiva But our country PM is still using Twitter... He should quit Twitter...
Rate this:
Cancel
29-ஜூன்-202118:30:39 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு மத்திய அரசு அதாவது மத்தியில் ஆளும் இந்திய அரசு (கணக்குப்பிள்ளைக்கு எரிச்சலைத்தான் இருக்கும்) போட வேண்டிய வழக்கு இது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X