நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.,: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Updated : ஜூன் 29, 2021 | Added : ஜூன் 29, 2021 | கருத்துகள் (106) | |
Advertisement
சென்னை: நீட் தேர்வுக்கு சட்ட நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக சட்டசபையில் கூறிய பா.ஜ., தற்போது நீட் பாதிப்பு குறித்த ஆய்வுக்குழுவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் மூலம், அக்கட்சி இரட்டைவேடம் போடுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஏ.கே.ராஜன் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.
NEET, BJP, DoubleStand, MaSubramanian, நீட், வழக்கு, பாஜக, இரட்டைவேடம், மா சுப்பிரமணியன்

சென்னை: நீட் தேர்வுக்கு சட்ட நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக சட்டசபையில் கூறிய பா.ஜ., தற்போது நீட் பாதிப்பு குறித்த ஆய்வுக்குழுவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் மூலம், அக்கட்சி இரட்டைவேடம் போடுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஏ.கே.ராஜன் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இதனை எதிர்த்து பா.ஜ., பொதுச்செயலர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இது குறித்து விளக்கமளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு ஜூலை 5ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.


latest tamil news


இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழக மாணவர்களின் நலன், மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கருத்தைக் கேட்கத்தான் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் கருத்துகள்தான் கேட்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு குறித்து ஆராயத்தான் இந்தக் குழு. இதற்கு மேலமை நீதிமன்றங்கள் அனுமதி வேண்டுமா என்பது குறித்து உரிய வழிமுறைகளை ஆராய்ந்து அடுத்த விசாரணையில் பதிலளிக்கப்படும்.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக பா.ஜ., சட்டசபையில் கூறியது. ஆனால் தற்போது நீதிமன்றத்தில் பா.ஜ., சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதிலிருந்து அக்கட்சி நீட் விவகாரத்தில் இரட்டைவேடம் போடுகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்தோடு பா.ஜ., இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-202106:43:05 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga சட்டசபையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறும்போது "சட்டத்திற்கு உட்பட்டு நீட் தேர்வு பற்றி அரசுக்கு ஆதரவு கொடுப்போம்" என்று தான் கூறியிருக்கிறார். ஆகவே நீட் தேர்வு விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்க்கமான முடிவை தீர்ப்பாக வெளியிட்டு உள்ளது. நளினி சிதம்பரம் நீட்டுக்கு ஆதரவாக வாதாடி இனி நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது என்று கூறியிருக்கிறார். இதையும் மீறி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தீமூகா அரசு இப்போது பாஜக மீது பழி போடுவது ஏற்புடையதல்ல. தேர்தல் அறிக்கை தயார் செய்யும்போது பாஜக ஆதரவு கொடுக்கும் என்றா கூறினார்கள். தமிழக மக்களை ஏமாற்ற இதெல்லாம் வெறும் சப்பை கட்டு. வெத்து வெட்டு அரசியல். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-202106:28:34 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga தீயமூகா தன்னுடைய தேர்தல் அறிக்கையை பாஜக கட்சியை கேட்டுக்கொண்டு தான் அறிவித்ததா என்பதை முதலில் மா.சு. தெளிவு படுத்தவேண்டும். மேலும் தமிழக பாஜக உறுப்பினர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தான் ஆதரவு கொடுப்போம் என்று மிகவும் தெளிவாக சொல்லி இருக்கின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகால த்ராவிஷ கட்சிகளின் ஆட்சியில் எதற்கெடுத்தாலும் விசாரணை கமிசன் போட்டு மக்கள் வரிப்பணத்தை வீணடித்தது தான் மிச்சம். மறந்த ஜெயலலிதாவின் இறப்பு குறித்து ஒரு விசாரணை கமிஷன் போட்டார்கள். இதுவரை கோடி கோடியாக பணம் தான் விரயமாகியது. இதுபோல கமிசன்கள் எல்லாம் வீண். நீட் தேர்வு கட்டாயமாக அமுலில் இருக்கவேண்டும். அப்போதுதான் மருத்துவ படிப்புக்கு கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்வது நிறுத்தப்படும்.
Rate this:
Cancel
Pudiyavan India - chennai,இந்தியா
30-ஜூன்-202106:27:31 IST Report Abuse
Pudiyavan India Neet eligibility exam only it should not be used for ranking. ion ranking will be based on +2 marks but those candidates should have got min pass mark in neet exam .this rule should be brought.
Rate this:
sridhar - Chennai,இந்தியா
30-ஜூன்-202107:09:37 IST Report Abuse
sridharஏன் ? நம் மாணவர்கள் நீட் தேர்வில் பின் தங்குவார்கள் என்று பரப்புகிறீர்கள். மற்ற மாநில மாணவர்களை பார்த்து ஏன் தாழ்வு மனப்பான்மை ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X