புதுடில்லி : அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கோவிட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
அவசர காலத்தில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் இந்த மருந்தை பயன்படுத்த, விரைவில் அனுமதி கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அனுமதி கிடைத்த உடன் முதல்கட்டமாக, 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, அவர்களின் உடல்நிலை உன்னிப்பாக கவனிக்கப்படும்.

அதேபோல், மாடர்னா நிறுவனத்தின் மருந்தை இந்தியாவில் இறக்குமதி செய்து, விற்பனை செய்ய மும்பையை சேர்ந்த சிப்லா என்ற மருந்து நிறுவனமும் டிசிஜிஐ அமைப்பிடம் விண்ணப்பித்து உள்ளது.
விண்ணப்பத்தில். இந்த மருந்திற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால், ஆரம்ப கட்ட பரிசோதனை இல்லாமல், இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்த தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்னர், 100 பேருக்கு தடுப்பூசி போட்டு, அது குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சிப்லா நிறுவனம் கூறியுள்ளது.
சிப்லா நிறுவனத்தின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE