'ஸ்பெல்லிங் பீ:' தொடர்ந்து கலக்கும் இந்திய வம்சாவளி குழந்தைகள்

Updated : ஜூன் 29, 2021 | Added : ஜூன் 29, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
நியூயார்க்: அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகளுக்கு இடையே ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற போட்டி 'ஸ்பெல்லிங் பீ'. இதில், கடந்த 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திய - அமெரிக்க குழந்தைகள்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று வருகின்றனர். கோவிட் பெருந்தொற்று பாதிப்பால் 2020ம் ஆண்டு இந்தப் போட்டி நடைபெறவில்லை.

நியூயார்க்: அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகளுக்கு இடையே ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற போட்டி 'ஸ்பெல்லிங் பீ'. இதில், கடந்த 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திய - அமெரிக்க குழந்தைகள்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று வருகின்றனர்.


latest tamil news



கோவிட் பெருந்தொற்று பாதிப்பால் 2020ம் ஆண்டு இந்தப் போட்டி நடைபெறவில்லை. கடைசியாக 2019ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது 8 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் இந்திய - அமெரிக்க குழந்தைகள்.



latest tamil news



இந்நிலையில், இந்த ஆண்டு 'ஸ்பெல்லிங் பீ' போட்டி ஆன்லைன் முறையில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தவர். அதில், 209 குழந்தைகள் தேர்வாகினர். அவர்களில் 70 பேர் இந்திய - அமெரிக்கர்கள். பல்வேறு சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இறுதிச் சுற்று ஜூலை 8ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ள, 11 பேரில் ஒன்பது பேர் இந்திய - அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Ram - கொங்கு நாடு,இந்தியா
30-ஜூன்-202102:17:30 IST Report Abuse
Ram Ram இப்படியே போனால் இந்த போட்டியை நடத்துவதை நிறுத்தி விட வாய்ப்பு உண்டு
Rate this:
Cancel
Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-202100:54:44 IST Report Abuse
Krishnan கடைசி சுற்றிற்கு வந்திருக்கும் குழந்தைகளுக்கும் வெற்றி பெறவிருக்கும் குழந்தைகளுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். மருத்துவம் சார்ந்த துறையில் பணியாற்ற ஞாபக சக்தியும், கடினமான மருத்துவம் தொடர்பான வார்த்தைகளை அர்த்தத்துடன் தெரிந்துகொள்ளவும் இது உதவும். இந்திய வம்சாவளி அமெரிக்கர்களுக்கென்று ஒரு மதிப்புள்ளது, அதை உட்சண்டை காரணமாக கெடுக்கவேண்டாம். என்னுடைய மகன் படிக்கும் பள்ளியில் நடந்த ஸ்பெல்லிங் பீ போட்டியில் வெற்றிபெற்றது கூட ஒரு இந்திய வம்சாவளி குழந்தை தான், அதை நேரில் கண்டுள்ளேன்.
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
30-ஜூன்-202100:09:39 IST Report Abuse
Sankar Ramu தமிழ் நாட்டில் எந்த விதமான டெஸ்ட்டுக்கும் திமுக ஆட்சியில் அனுமதி கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X