சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பழக்க தோஷம்!

Added : ஜூன் 29, 2021
Share
Advertisement
பழக்க தோஷம்!'அடிக்கடி கட்சி மாறினால், இதுபோன்ற அவஸ்தைகளை சந்திக்க தான் வேண்டும்' என, தெலுங்கானா மாநில பா.ஜ., மூத்த நிர்வாகியான எடாலா ராஜேந்தரை கிண்டலடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர். இவர், 20 ஆண்டுகளாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில், விசுவாசம் மிக்க நிர்வாகியாக இருந்தவர். மாநில சுகாதாரத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். சில மாதங்களுக்கு முன், முதல்வர்

அக்கம் பக்கம்


பழக்க தோஷம்!



'அடிக்கடி கட்சி மாறினால், இதுபோன்ற அவஸ்தைகளை சந்திக்க தான் வேண்டும்' என, தெலுங்கானா மாநில பா.ஜ., மூத்த நிர்வாகியான எடாலா ராஜேந்தரை கிண்டலடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர். இவர், 20 ஆண்டுகளாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில், விசுவாசம் மிக்க நிர்வாகியாக இருந்தவர். மாநில சுகாதாரத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். சில மாதங்களுக்கு முன், முதல்வர் சந்திரசேகர ராவுக்கும், ராஜேந்தருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் இருந்து விலகிய ராஜேந்தர், பா.ஜ.,வில் ஐக்கியமானார். 'தெலுங்கானாவில் பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்துவது தான் என் லட்சியம்' என, தனக்கு தானே சபதம் எடுத்து, மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ., நிர்வாகிகளிடையே பேசிய ராஜேந்தர், 'தெலுங்கானாவில் அடுத்த சில ஆண்டுகளில், 'பிங்க்' எனப்படும் இளம் சிவப்பு நிற கொடி பட்டொளி வீசிப் பறக்கும்' என, முழங்கினார்; இதனால் கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.ஏனெனில், பிங்க் நிற கொடி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் கொடி. காவிக் கொடி என கூறுவதற்கு பதிலாக, பிங்க் கொடி என கூறிவிட்டார். கூட்டம் முடிந்ததும், அவரிடம் இதை கட்சி நிர்வாகிகள் சுட்டிக் காட்டினர். 'ஆயுள் முழுதும் ஒரே கட்சியில் குப்பை கொட்டினால், அரசியல்வாதிகள் பிழைக்க முடியாது. பழக்க
தோஷத்தில் கூறிவிட்டேன்; விடுங்கப்பா...' என கூறியபடியே நடையை கட்டினார் எடாலா ராஜேந்தர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X