பார்லி.,மழைக்கால கூட்டத்தொடர்: புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்| Dinamalar

பார்லி.,மழைக்கால கூட்டத்தொடர்: புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

Updated : ஜூலை 01, 2021 | Added : ஜூன் 29, 2021 | கருத்துகள் (6) | |
கொரோனா சூழல் குறைந்து, அரசியல் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் துவங்கவுள்ளது. ஜூலை 19ல் துவங்கி, ஆக., 13 வரையில் இந்த கூட்டத்தொடர் நடக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஒவ்வொரு ஆண்டும் ஜனாதிபதி உரையுடன் பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்கும். முதலில் பட்ஜெட் கூட்டத்தொடரும், அடுத்ததாக
மழைக்காலம், கூட்டம், பார்லி.,எதிர்க்கட்சிகள் திட்டம்

கொரோனா சூழல் குறைந்து, அரசியல் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் துவங்கவுள்ளது. ஜூலை 19ல் துவங்கி, ஆக., 13 வரையில் இந்த கூட்டத்தொடர் நடக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஜனாதிபதி உரையுடன் பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்கும். முதலில் பட்ஜெட் கூட்டத்தொடரும், அடுத்ததாக மழைக்கால கூட்டத்தொடரும், இறுதியாக குளிர்கால ஒரு கூட்டத்தொடரும் நடப்பது வழக்கம்.


பரிந்துரைகடந்தாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக துவங்கினாலும் இடையிலேயே, கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது.அதன்பின் கொரோனா தொற்று சூழல் தீவிரம் அடைந்ததால் பார்லிமென்ட் கூட்டத்தொடர்களை சரிவர நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதற்கிடையே கொரோனா இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுத்து, நாடு முழுதும் பெரிய அளவில் பதற்றம் ஏற்பட்டது. தலைநகர் டில்லியில் நிலவிய பீதி, உச்சகட்டமாக இருக்கவே, நகரமே முற்றிலுமாக ஸ்தம்பித்தது.

கடந்த சில வாரங்களாகவே பழைய சூழல் மாறி, தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அரசு அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் இன்னும் ஒருவித அச்சம் நிலவுகிறது.இதனால் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில் தான் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பார்லிமென்ட் விவகாரங்களுக்கான அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் மழைக்கால கூட்டத்தொடரை திட்டமிட்டபடி நடத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, வரும் ஜூலை 19ல் துவங்கி, ஆக., 13 வரையில் கூட்டத்தொடர் நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


அமளிபிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதல் பெற்ற பின் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். தடுப்பூசி போடுவது தீவிரம் அடைந்த பின் நடக்கும் முதல் கூட்டத்தொடர் இது என்பதால், அனைத்து தரப்பிலும் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போதைய நிலவரப்படி ராஜ்யசபா செயலக குறிப்பின்படி 179 எம்.பி.,க்கள் தடுப்பூசி போட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. லோக்சபாவில், 540 எம்.பி.,க்களில் 403 பேர் தடுப்பூசி போட்டுவிட்டனர்.
இவர்கள் அனைவருமே இரண்டு டோஸ்களையும் செலுத்தி விட்டனர். மீதமுள்ள எம்.பி.,க்களும் குறைந்தது ஒரு டோஸ் எடுத்துக் கொண்டுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.எனவே முந்தைய கூட்டத்தொடர்களை காட்டிலும் இம்முறை சபை நடவடிக்கைகளில், எம்.பி.,க்கள் பெருமளவு பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.எதிர்க்கட்சிகளை பொறுத்தவரையில் இந்த கூட்டத்தொடரில் பெரும் அமளியில் இறங்கலாம்.தடுப்பூசி திட்டத்தில் நிலவும் குளறுபடிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை, மத்தியஅரசின் மீது வைக்க திட்டமிட்டுள்ளனர்.கடும் விவாதம்விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்த விவகாரமும் பார்லிமென்டில் புயலை கிளப்பலாம். ஜம்முவில் நடந்த ட்ரோன் தாக்குதல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட விஷயங்களும் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை தரக் கூடும்.அரசியல் ரீதியாக பார்த்தால் தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உ.பி., சட்டசபை தேர்தல் ஆகியவையும் பார்லிமென்டில் கடும் விவாதங்களை ஏற்படுத்தலாம்.


கட்டுப்பாடு தொடருமா?இரு சபைகளிலும் நெருக்கமாக உட்காராமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென்பதற்காக, லோக் சபா மற்றும் ராஜ்யசபா செயலகங்களின் உயர் அதிகாரிகள், கடந்த கூட்டத்தொடரில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதன்படி சபைகள் மட்டுமல்லாது, பார்வையாளர் மாடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கிருந்தே எம்.பி.,க்கள் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.காலை, மாலை என இரு பிரிவுகளாக பிரித்து, காலையில் ராஜ்யசபா எம்.பி.,க்கள் மட்டும் சபை நடவடிக்கைகளில் பங்கேற்றனர். மதியம் லோக்சபா நடவடிக்கைகள் துவங்கி, இரவு வரையிலும் நடத்தப்பட்டது.
பார்வையாளர்கள் அனுமதி ரத்து, ஓரிரு நுழைவு வாயில்கள் மட்டுமே அனுமதி, முக கவசம், கண்ணாடி தடுப்புகள் என, எம்.பி.,க்களின் பாதுகாப்புக்காக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.இம்முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட எம்.பி.,க்கள் பலரும் வருவதால், இதே போன்ற நடவடிக்கைகள் தொடருமா அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.


சான்றிதழ் கட்டாயம்?இம்முறை பார்லிமென்டிற்குள் வரும் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், அதிகாரிகள், அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் என ஒவ்வொருவரும், தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை நுழைவுவாயிலிலேயே காட்ட வேண்டும். அதன் பின்னே, உள்ளே அனுமதிக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது. - நமது டில்லி நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X